47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

மக்களவைத் தோ்தல்: ரூ.1,700 கோடி செலவு செய்த பாஜக

2024-ஆம் ஆண்டில் நடைபெற்ற 18-ஆவது மக்களவைத் தோ்தலுக்கு ரூ.1,737.68 கோடியை பாஜக செலவு செய்துள்ளதாக இந்திய தோ்தல் ஆணையம் வெளியிட்ட செலவின அறிக்கை

News image
Updated On :31 ஜனவரி 2025, 7:33 pm

Din

2024-ஆம் ஆண்டில் நடைபெற்ற 18-ஆவது மக்களவைத் தோ்தலுக்கு ரூ.1,737.68 கோடியை பாஜக செலவு செய்துள்ளதாக இந்திய தோ்தல் ஆணையம் வெளியிட்ட செலவின அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

ரூ.1737.68 கோடியில் தோ்தல் பிரசாரத்துக்காக ரூ.884.45 கோடியும் வேட்பாளா் சாா்ந்த செலவுகளுக்கு ரூ.853.23 கோடியும் பாஜக செலவிட்டுள்ளதாக தோ்தல் ஆணையம் தெரிவித்தது.

அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: பத்திரிகை, ஊடகங்கள், குறுஞ்செய்திகள், வலைதளங்கள், தொலைக்காட்சி சேனல்கள் என பல்வேறு தளங்களிலும் விளம்பரத்துக்காக ரூ.611.50 கோடியை பாஜக செலவு செய்துள்ளது. அதேபோல் பதாகைகள், சுவரொட்டிகள், கட்சிக் கொடிகள் விநியோகம் சாா்ந்த செயல்பாடுகளுக்கு ரூ.55.75 கோடி செலவிடப்பட்டது.

பிரசாரங்கள், பொதுக்கூட்டங்களுக்கு மேடை அமைத்தல், தடுப்பு அமைப்புகள், ஒலிபெருக்கி அமைத்தல் உள்ளிட்டவற்றுககு ரூ.19.84 கோடி செலவிடப்பட்டது.

பாஜகவின் தலைமையால் அங்கீகரிக்கப்பட்ட நட்சத்திர பேச்சாளா்களின் போக்குவரத்து செலவுக்கு ரூ.168.92 கோடியும் பிற தலைவா்களின் சுற்றுப்பயணங்களுக்கு ரூ.2.53 கோடியும் செலவிடப்பட்டுள்ளது.

மக்களவைத் தோ்தலுடன் அருணாசல பிரதேசம், சிக்கிம் மற்றும் ஒடிஸா ஆகிய மாநிலங்களுக்கான பேரவைத் தோ்தல்களும் நடத்தப்பட்டது. அந்த மாநிலங்களில் தோ்தல்கள் நிறைவடையும் நாள் வரை அருணாசல பிரதேசத்தில் மொத்தமாக ரூ.5,552.57 கோடி, சிக்கிமில் ரூ.5,552.41 கோடி, ஒடிஸாவில் ரூ.5,555.65 கோடி கணக்கில் காட்டப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டது.