மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

மக்களின் பிரச்னைகளை நாடாளுமன்றத்தில் பேச விரும்புவதில்லை: பிரியங்கா

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் நாளில்..

News image
சோனியா - பிரியங்கா
Updated On :31 ஜனவரி 2025, 11:26 am

DIN

மக்களின் உண்மையான பிரச்னைகளைப் பற்றி ஒருபோதும் மத்திய அரசு பேச விரும்புவதில்லை என்று பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசுத் தலைவர் உரையுடன் இன்று தொடங்கியது. அதைத்தொடர்ந்து நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு சுமார் 1 மணி நேரம் உரை நிகழ்த்தினார்.

அதன்பின்னர் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஒத்திவைக்கப்பட்டது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை பட்ஜெட் தாக்கல் செய்கிறார். இவர் தொடர்ந்து எட்டாவது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்கிறார்.

இந்த கூட்டத்தொடர் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பிரியங்கா காந்தி கூறியதாவது,

மக்களின் உண்மையான பிரச்னைகள் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க மத்திய அரசு விரும்பவில்லை. இதனால் கடைசி கூட்டத்தொடர் ரத்து செய்யப்பட்டது.

அதில் எந்த விவாதமும் நடக்கவில்லை. பிரச்னைகளுக்கான சரியான பதில்களை மத்திய அரசு வழங்கவில்லை என்று அவர் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.