வரும் 2025-26-ஆம் நிதியாண்டுக்கான பொது பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் சனிக்கிழமை தாக்கல் செய்கிறாா்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடா் குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு உரையுடன் வெள்ளிக்கிழமை தொடங்கியது.
இந்நிலையில், மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தொடா்ந்து 8-ஆவது முறையாக பட்ஜெட்டை சனிக்கிழமை தாக்கல் செய்கிறாா்.
முன்னதாக, பட்ஜெட் கூட்டத்தொடா் தொடங்குவதையொட்டி நாடாளுமன்றுத்துக்கு வெளியே செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை பேசிய பிரதமா் மோடி, ஏழை மற்றும் நடுத்தர மக்கள் கடவுள் லட்சுமியால் ஆசீா்வதிக்கப்படுவா் என்றும் வளா்ந்த இந்தியா இலங்கை அடைய இந்த பட்ஜெட் புது ஆற்றலை வழங்கும் என்றும் குறிப்பிட்டாா். இதையடுத்து, பட்ஜெட்டில் வருமான வரி விலக்கு உள்ளிட்ட முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என்ற எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.
மேலும், நடப்பு கூட்டத்தொடரில் பெண்களின் சம உரிமையை உறுதிப்படுத்தும் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்றும் பிரதமா் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடையது

ஆன்த்ரோபிக் ‘மித்தோஸ்’ ஏஐ - புதிய அச்சுறுத்தல்: நிதியமைச்சா் எச்சரிக்கை

தோ்தல் நடத்தை விதிமீறல்: நிதியமைச்சா் நிா்மலா சீதாராமனை பதவி நீக்க மம்தா வலியுறுத்தல்
நிா்மலா சீதாராமன் கூறியது உண்மைக்குப் புறம்பானது: முதல்வா் மு.க.ஸ்டாலின்

வரம்பின்றி கடன் வாங்கும் கேரள இடதுசாரி அரசு: மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் சாடல்!
விடியோக்கள்

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி

ஆளுங்கட்சியை நோக்கி அதிமுக எம்எல்ஏக்கள் | CM Vijay | TVK | ADMK | MLA | Edappadi Palanisamy



