மூன்று மாதங்களில் 767 விவசாயிகள் தற்கொலை!

மகாராஷ்டிரத்தில் 3 மாதங்களில் 767 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டது பற்றி...
சித்திரப் படம்
சித்திரப் படம் TNIE
Published on
Updated on
1 min read

மகாராஷ்டிர மாநிலத்தில் மூன்று மாதங்களில் மட்டும் 767 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டதாக சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிர சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் அதிகரித்து வரும் விவசாயிகள் தற்கொலை குறித்து மாநில அரசிடம் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் எழுத்துப்பூர்வமாக கேள்வி எழுப்பி இருந்தனர். மேலும், தற்கொலை செய்துகொள்ளும் விவசாயிகளுக்கு மாநில அரசு எவ்வித உதவிகளை செய்து வருகிறது என்ற விவரங்களை கோரியும், தற்போது வழங்கப்படும் நிதியுதவி ரூ. 1 லட்சத்தை உயர்த்த வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தனர்.

இதற்கு எழுத்துப்பூர்வ பதிலை தாக்கல் செய்த மாநில அமைச்சர் மகரந்த் பாட்டீல் தெரிவித்திருப்பதாவது:

“ஜனவரி 2025 முதல் மார்ச் வரையிலான மூன்று மாதங்களில், மொத்தம் 767 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர், அவர்களில் 376 விவசாயிகள் அரசு இழப்பீடு தொகையான ரூ. 1 லட்சம் பெற தகுதியுடையவர்கள். மேலும், 200 விவசாயிகள் அரசு நிர்ணயித்த அளவுகோல்களை பூர்த்தி செய்யாததால் உதவி பெறவில்லை.

மேற்கு விதர்பாவில் உள்ள யவத்மால், அமராவதி, அகோலா, புல்தானா மற்றும் வாசிம் ஆகிய இடங்களில் 257 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். அவர்களில் 76 பேரின் குடும்பங்கள் மாநில அரசிடமிருந்து நிதி உதவி பெற்றுள்ளது. 74 விண்ணப்பங்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளது.

மகாராஷ்டிர அரசு விவசாயிகளுக்கு அனைத்து உதவிகளையும் வழங்குவதை உறுதி செய்யும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Summary

It was reported in the Maharashtra Legislative Assembly on Tuesday that 767 farmers committed suicide in the state in just three months.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Open in App
Dinamani
www.dinamani.com