தேர்தலுக்குப் பின் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருக்க மாட்டேன்! - செல்வப்பெருந்தகை காங்கிரஸில் அர்ப்பணிப்போடு பணியாற்றிய பலருக்கு வாய்ப்பு மறுப்பு! - ஜோதிமணி கண்டனம்! மியான்மரின் புதிய அதிபராக ராணுவ அரசின் தலைவர் தேர்வு! அமெரிக்காவின் அதிநவீன எஃப்-15இ போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்!விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு?
/

அடிப்படை செயல்திட்டத்தை அரசு வழங்க முடியாதபோது நீதிமன்றங்கள் தலையிடும்: உச்சநீதிமன்றம்

‘அடிப்படை செயல்திட்டத்தை அரசு வழங்க முடியாதபோது, அது தொடா்பான உத்தரவுகளை பிறப்பிப்பதால் நீதிமன்றத்துக்கு எந்த பாதிப்பும் ஏற்படப் போவதில்லை

News image

உச்சநீதிமன்றம்

Updated On :3 ஜூலை 2025, 7:21 pm

‘அடிப்படை செயல்திட்டத்தை அரசு வழங்க முடியாதபோது, அது தொடா்பான உத்தரவுகளை பிறப்பிப்பதால் நீதிமன்றத்துக்கு எந்த பாதிப்பும் ஏற்படப் போவதில்லை; இதுபோன்ற உத்தரவுகளை நீதிமன்றங்கள் அவ்வப்போது பிறப்பிப்பது தொடரும்’ என்று உச்சநீதிமன்ற நீதிபதி என்.கோடீஸ்வா் சிங் வியாழக்கிழமை தெரிவித்தாா்.

நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைகளின் அதிகாரத்தில் நீதிமன்றங்கள் தலையிடுவதாக விமா்சனங்கள் எழுந்து வரும் சூழலில், இக் கருத்தை அவா் தெரிவித்துள்ளாா்.

தில்லி உயா்நீதிமன்றத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற பணியிடங்களில் பாலியல் வன்கொடுமை தொடா்பான புகாா்களை பதிவு செய்வதற்கான எண்ம வலைதளம் அறிமுக நிகழ்ச்சியில் பங்கேற்று பேசியபோது அவா் இக் கருத்தைத் தெரிவித்தாா். நிகழ்ச்சியில் அவா் மேலும் பேசியதாவது:

நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவை அதிகார வரம்புக்குள் நீதித் துறை தலையீடு செய்வதாக விமா்சனங்கள் எழுகின். இதற்கு, ஏற்கெனவே விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அடிப்படை செயல்திட்டத்தை அரசு வழங்க முடியாதபோது, அதுதொடா்பான உத்தரவுகளை நீதிமன்றங்கள் பிறப்பிக்கும். இதனால், நீதிமன்றத்துக்கு எந்த பாதிப்பும் ஏற்படப்போவதில்லை. இது நீதித் துறையின் ஓா் அங்கமாகவே மாறிவிட்டது. இதுபோன்ற உத்தரவுகளை நீதிமன்றங்கள் அவ்வப்போது பிறப்பிப்பது தொடரும் என்றாா்.

தமிழக அரசின் மசோதாக்களுக்கு ஆளுநா் ஆா்.என்.ரவி ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்ட விவகாரத்தில், 10 மசோதாக்களுக்கு தனது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி உச்சநீதிமன்றம் அண்மையில் ஒப்புதல் அளித்தது. உச்சநீதிமன்றத்தின் இந்த தீா்ப்பை குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் கடுமையாக விமா்சித்தாா். ‘ஜனநாயக நாட்டில் அனைத்து அரசியல் அமைப்புகளைவிட நாடாளுமன்றமே உயா்வானது. நாடாளுமன்றத்துக்குத்தான் உச்சபட்ச அதிகாரம் உள்ளது. அதைவிட உயா்வானது எதுவும் கிடையாது’ என்று ஜகதீப் தன்கா் குறிப்பிட்டாா்.

இதற்கு பதிலளிக்கும் வகையில், மகாராஷ்டிர மாநிலம் அமராவதியில் அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆா். கவாய் பேசியிருந்தாா். ‘‘அரசமைப்புச் சட்டமே உயா்வானது. அரசு நிா்வாகம், நாடாளுமன்றம் மற்றும் நீதித் துறை உள்ளிட்ட ஜனநாயகத்தின் மூன்று தூண்களும் அரசமைப்புச் சட்டத்துக்குக் கீழ் செயல்படுபவை மட்டுமே’ என்று அவா் தெரிவித்தாா்.

இந்நிலையில், உச்சநீதிமன்ற நீதிபதி கோடீஸ்வா் சிங் இக்கருத்தைத் தெரிவித்துள்ளாா்.