
முன்னாள் குடியரசு துணைத் தலைவரும் மறைந்தவருமான கிருஷணகாந்தின் பேரன் விராட் காந்த் பாஜகவில் இணைந்தார்.
தில்லியில் உள்ள பாஜக அலுவலகத்தில் கட்சியின் தேசிய பொதுச்செயலர் தருண் சுக், பஞ்சாப் பாஜக தலைவர் சுனில் ஜாஹர் ஆகியோர் முன்னிலையில் விராட் காந்த் கட்சியில் சனிக்கிழமை இணைந்தார்.
அவரை பாஜக நிர்வாகிகள் வரவேற்றனர்.
இதுகுறித்து தருண் சுக் கூறுகையில், "இது ஒரு தலைசிறந்த செயல். அவரது மறைந்த தாத்தா கிருஷ்ண காந்த் சுதந்திர இயக்கத்திற்கு பங்களித்திருக்கிறார்.
அவர் இந்தியாவின் குடியரசு துணைத் தலைவராகவும் இருந்தார்.
இப்போது, அவரது பேரன் பாஜகவில் இணைவது ஒரு பெரிய மைல்கல். காந்த் குடும்பத்தைச் சேர்ந்தவர் கட்சியை வலுப்படுத்த உதவுவார் என்று தெரிவித்தார்.
கிருஷ்ண காந்த் ஜூலை 2002 ஆம் ஆண்டு தனது அலுவலகத்தில் மாரடைப்பால் 75 வயதில் காலமானார். பதவியில் இருந்தபோதே காலமான ஒரே இந்திய குடியரசு துணைத் தலைவராக அவர் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Virat Kant, the grandson of former Vice President late Krishan Kant, joined the Bharatiya Janata Party (BJP) on Saturday in Delhi.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.