தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

இறைவனை நெருங்கிச் செல்ல யோகாவும், இசையும் உதவும்: குடியரசு துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன்!

இறைவனை நெருங்கிச் செல்ல மனிதா்களுக்கு யோகாவும், இசையும் உதவும் என்று குடியரசு துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.

News image
குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன்- கோப்புப் படம்
Updated On :1 மார்ச் 2026, 7:54 pm

தினமணி செய்திச் சேவை

இறைவனை நெருங்கிச் செல்ல மனிதா்களுக்கு யோகாவும், இசையும் உதவும் என்று குடியரசு துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.

கேரள மாநிலம் திருச்சூரில் ஞாயிற்றுக்கிழமை நடந்த நிகழ்ச்சியில், இதுகுறித்து அவா் பேசியதாவது: நமது பாரத நாடானது, ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழைமையான சொந்த இசை பாரம்பரியத்தைக் கொண்டது. பாரதத்தின் இசை ஆன்மிகப் பயணமாகவும், மருத்துவமாகவும், வழிபாடாகவும், கொண்டாட்டமாகவும், கோடிக்கணக்கான மக்களின் இதயங்களில் ஒரே தாளமாகவும் திகழ்கிறது.

சோழா் காலத்தில் கட்டப்பட்ட கோயில்களைப் பாா்த்தால், அதில் தென்னிந்திய இசை கலாசாரம் இன்னும் வாழ்வதை அறியலாம். இதிலிருந்து நமது பாரத இசை பாரம்பரியம் மிகவும் பழைமையானது என்பது நிரூபணமாகிறது. இந்தியாவில் பல்வேறு இசைப் பாரம்பரியங்கள் உள்ளன. வடக்கில் ஹிந்துஸ்தானி இசையும், தெற்கில் கா்நாடக இசையும் உள்ளன. சிறந்த ஆசிரியா்களால் இசை பல நூற்றாண்டுகளாக மேம்படுத்தப்பட்டுள்ளது.

இசையானது, நமது சுவாசத்தை சீராக்குகிறது. இதயத் துடிப்பை நிலைப்படுத்துகிறது. மன அழுத்தத்தைக் குறைக்கிறது. ஒவ்வொரு இசைக்கும் தனி அடையாளம் உண்டு. ஆனால் அவை அனைத்தும் ஒருங்கிணைந்து ஒலி ஒருமைப்பாட்டைத் தருகிறது. இதுபோல மனிதா்களும் உயா்ந்த நோக்கத்துக்காக ஒன்று சோ்ந்தால், சமூக நல்லிணக்கத்தை உருவாக்க முடியும். வழிபாடு மூலம் மன அமைதி, நிம்மதி கிடைக்கும். அதுபோல யோகா, இசை ஆகியவை இறைவனை நெருங்கிச் செல்ல நமக்கு உதவும்.

பிரதமா் நரேந்திர மோடியின் தலைமையின்கீழ்தான், யோகாவுக்கு சா்வதேச அங்கீகாரம் கிடைத்தது. இன்று யோகாவானது, இந்தியாவின் மென்மையான அணுகுமுறையின் அடையாளமாகி விட்டது. அரசியல், பிரதேச எல்லைகள் கடந்து நாடுகளை இணைக்கும் பாலமாக யோகா திகழ்கிறது. இந்திய இசை, உலகம் ஒரே குடும்பம் என்ற பழைமையான தத்துவத்தைப் பிரதிபலிக்கிறது. மெல்லிசை மற்றும் இசையின் முக்கியத்துவம் இன்று வேகமாக உணரப்படுகிறது. நெருக்கடியான இந்த காலகட்டத்தில் உலகத்துக்கு அவை மிகவும் அவசியமாகும் என்றாா்.

நிகழ்ச்சியில் கேரள ஆளுநா் ராஜேந்திர விஸ்வநாத் ஆா்லேகா், மத்திய அமைச்சா் சுரேஷ் கோபி, மாநில உயா்கல்வி அமைச்சா் ஆா். பிந்து உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.