புது தில்லி: பிகாரில் சுமார் 3 கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் வாக்குரிமையை இழக்கும் அபாயம் இருப்பதாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதொரு பொதுநல மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிகாரில் வரும் டிசம்பர் இறுதிக்குள் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. இந்தச் சூழலில், பிகாரில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை தோ்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது.
நாடெங்கிலும் பல்வேறு மாநிலத் தோ்தல்களில் பாஜகவுக்கு சாதகமாக வாக்காளா் பட்டியலில் முறைகேடுகள் நடைபெற்றதாக எதிா்க்கட்சிகள் தொடா்ந்து குற்றஞ்சாட்டி வருகின்றன. இந்தநிலையில், பிகாரில் நடைபெறும் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளும் பாஜகவுக்கு சாதகமானதொரு நடவடிக்கையாக எதிர்க்கட்சிகள் கருதுகின்றன. இதனால் இதற்கு எதிர்ப்பும் வலுத்துள்ளது.
வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள்(எஸ்.ஐ.ஆர்):
வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளில் கோரப்பட்டுள்ள ஆவணங்களால் பிகாரில் சுமார் 3 கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் அதிலும் குறிப்பாக, சிறுபான்மையினர், எஸ்சி எஸ்டி பிரிவினர், இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் பின்தங்கிய சமூகங்களைச் சார்ந்தோர் பலர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படுவர் என்று கணிக்கப்பட்டுள்ளது.
ஏனெனில், பிகார் போன்றதொரு வளர்ச்சியடையாத மாநிலத்தில் தேர்தல் ஆணையத்தால் வாக்காளர்களிடமிருந்து வலியுறுத்தப்பட்டுள்ள மேற்கண்ட ஆவணங்கள் கிராமப்புறங்களைச் சேர்ந்த பல லட்சம் வாக்களர்களிடம் இல்லை என்று தெரிய வந்துள்ளது. இந்தநிலையில், தேர்தல் ஆணையத்தால் ஆவணங்களை சமர்ப்பிக்க குறுகிய காலக்கெடுவே விதிக்கப்பட்டுள்ளதால் அதற்குள் மேற்கண்ட லட்சக்கணக்கான வாக்காளர்களால் எப்படி அரசு நிர்வாகத்திடமிருந்து ஆவணங்களுக்கு விண்ணப்பித்து அவற்றைளப் பெற்று தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்க முடியும் என்ற கேள்வி எழுந்துள்ளது. இது சாத்தியமற்ற நடைமுறையாகவே பார்க்கப்படுகிறது.
இதனைச் சுட்டிக்காட்டி வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளுக்கு(எஸ்.ஐ.ஆர்) எதிராக உச்சநீதிமன்றத்தில் ஜனநாயக சீா்திருத்தத்துக்கான சங்கம் (ஏடிஆா்) சாா்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கை அவசரகதியில் முடிவெடுக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்:
அந்த மனுவில், தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கை அவசரகதியில் முடிவெடுக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அரசமைப்பு சட்டப்பிரிவு 326-ஐ மீறிய நடவடிக்கையை தேர்தல் ஆணையம் செயல்படுத்தியுள்ளதாக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் கூறப்பட்டுள்ளது.
‘தேர்தல் ஆணையம் தற்போது பிகாரில் பிறப்பித்துயுள்ள உத்தரவின்படி, ஒரு வாக்காளர் தமது குடியுரிமையை நிரூபிக்க தேவையான அடையாளச் சான்று ஒன்றைச் சமர்ப்பிக்க வேண்டும். அத்துடன் தமது தாயார் அல்லது தந்தையாரின் குடியுரிமையை நிரூபிக்கும் சான்றையும் சமர்ப்பிக்க வேண்டும்.
இல்லையேல், அந்த வாக்காளரின் பெயர், புதிதாக தயாரிக்கப்படும் வரைவு வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படாது. மேலும், வாக்காளர் பட்டியலில் இருந்தும் நீக்கப்படும். அடையாளச் சான்றாக ஆதார் அல்லது ரேஷன் அட்டை ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளதால் ஏழை மக்கள் பலர் வாக்குரிமையை இழக்கும் அபாயம் இருக்கிறது.
இதனால் நேர்மையான முறையில் தேர்தல் நடைபெறுவதும் ஜனநாயக நெறியும் தடைபடும் சூழல் உருவாகிறது’ என்று உச்சநீதிமன்ற மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Summary
Bihar lakhs in may lose vote - adr tells sc
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பிகாரில் மின்னல் பாய்ந்து 7 பேர் பலி

தில்லியில் எஸ்ஐஆா் பணிகள் ஜூன் 30 தொடக்கம்: அக். 7-இல் இறுதி வாக்காளா் பட்டியல்

எஸ்ஐஆர் மேற்கொள்ள தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் உள்ளது; ஆனால்...! உச்சநீதிமன்றம் தீர்ப்பு

16 மாநிலங்கள், 3 யூனியன் பிரதேசங்களில் மே 30 முதல் எஸ்ஐஆா் பணிகள்: தோ்தல் ஆணையம் அறிவிப்பு
விடியோக்கள்

அது என்ன திட்டம் என்றே யாருக்கும் தெரியவில்லை! நான் முதல்வன் திட்டம் குறித்து அமைச்சர் Nirmal Kumar

”தேர்தலுக்கு முன் ஆடினார் பாடினார்! இப்போது?”: நயினார் நாகேந்திரன்! | TVK | BJP

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies




