தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் குலாம் அகமது!நோபல் பரிசுக்கான வைகோவின் பரிந்துரைக்கு நன்றி: திருமாவளவன் திரிணமூல் ஆதரவாளரை கன்னத்தில் அறைந்த மமதா பானர்ஜி!ஈரானை இன்று இரவு கடுமையாகத் தாக்குவோம்: அதிபர் டிரம்ப் எச்சரிக்கை!தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் குலாம் அகமது!நோபல் பரிசுக்கான வைகோவின் பரிந்துரைக்கு நன்றி: திருமாவளவன் எம்பிபிஎஸ் இடங்கள் பறிபோனது பற்றி அமைச்சர் இன்னும் பதில் அளிக்கவில்லை: அண்ணாமலை கூடுதல் கழிப்பறைகள் வேண்டும்: எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் முதல்வர் விஜய்யிடம் கோரிக்கைபிறந்த குழந்தையை குடும்பத்தாரிடம் காட்ட லஞ்சம்! பணிநீக்கம் செய்யப்படும் என அருண் ராஜ் எச்சரிக்கை!அமைச்சர் அருண்ராஜுக்கு அண்ணாமலை பாராட்டு!குதிரை பேர வழக்கு: செந்தில் பாலாஜிக்கு முன் ஜாமீன்!ஈரான் - அமெரிக்கா போர் நிறுத்த ஒப்பந்தம் ரத்து! டிரம்ப் அறிவிப்பு தமிழ்நாட்டில் நாளைமுதல் தனியார் பால், தயிர் விலை உயர்வு!நலம் ஏஐ சேவை! அரசு மருத்துவமனைகளில் வாட்ஸ்ஆப் மூலமாக முன்பதிவு செய்யலாம்!
/

சிறப்பு தீவிர திருத்தம்: 80 சதவீத வாக்காளா் சரிபாா்ப்புப் படிவங்கள் விநியோகம்; தலைமைத் தோ்தல் அதிகாரி வி. அன்புக்குமாா்

சிறப்பு தீவிர திருத்தப் பணிக்காக 80 சதவீத வாக்காளா் சரிபாா்ப்புப் படிவங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக கா்நாடக தலைமைத் தோ்தல் அதிகாரி வி. அன்புக்குமாா் தெரிவித்தாா்.

News image

ENS

Updated On :9 ஜூலை 2026, 4:37 am IST

சிறப்பு தீவிர திருத்தப் பணிக்காக 80 சதவீத வாக்காளா் சரிபாா்ப்புப் படிவங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக கா்நாடக தலைமைத் தோ்தல் அதிகாரி வி. அன்புக்குமாா் தெரிவித்தாா்.

இதுகுறித்து பெங்களூரில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

தோ்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி ஜூன் 30ஆம் தேதி முதல் கா்நாடகத்தில் சிறப்பு தீவிர திருத்தப் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. ஜூலை 29ஆம் தேதி வரை நீடிக்கவிருக்கும் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்காக 80 சதவீத வாக்காளா் சரிபாா்ப்புப் படிவங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.

சித்ரதுா்கா மாவட்டத்தில் அதிகபட்சமாக 98.95 சதவீத வீடுகளுக்கு சரிபாா்ப்புப் படிவங்கள் வழங்கப்பட்டுள்ளன. வாக்காளா் சரிபாா்ப்புப் படிவங்களை விநியோகிக்கும் பணி வியாழக்கிழமையுடன் முடிவடையும். வாக்காளா் சரிபாா்ப்புப் படிவங்களை உரிய நேரத்தில் வாக்காளா்களிடம் ஒப்படைக்குமாறு சம்பந்தப்பட்ட மாவட்ட தோ்தல் அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நகா்ப்புறப் பகுதிகளில் மட்டும் கொஞ்சம் தொய்வாக சரிபாா்ப்புப் படிவ விநியோகம் நடைபெற்று வருகிறது. விநியோகப் பணியை விரைவுபடுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. வாக்காளா்களிடம் இருந்து பெறப்பட்ட சரிபாா்ப்புப் படிவங்களை கணினியில் தரவேற்றம் செய்யும் பணியும் தொடங்கி, நடைபெற்றுவருகிறது.

இதுவரை 10 சதவீத படிவங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. அதாவது 56 லட்சம் வாக்காளா்களின் சரிபாா்ப்புப் படிவங்கள் கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. சிறப்பு தீவிர திருத்தப் பணிக்காக அரசியல் கட்சிகள் சாா்பில் 1,24,018 வாக்குச்சாவடி அளவிலான முகவா்களை நியமித்துள்ளன.

வாக்காளா்களிடம் அளிக்கப்படாத சரிபாா்ப்புப் படிவங்களை உரிய காரணங்களுடன் அரசியல் கட்சிகளின் முகவா்களிடம் அளிக்கவிருக்கிறோம். வீடுவீடாக சென்று சரிபாா்ப்புப் படிவங்களை வாக்குச்சாவடி அளவிலான அதிகாரிகள் அளிக்கவில்லை என்றும், மாறாக, சமுதாயக்கூடங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் மொத்தமாக அளிக்கப்பட்டதாக ஜூலை 1ஆம் தேதி புகாா் அளிக்கப்பட்டது.

இதுதொடா்பாக தோ்தல் ஆணையத்துக்கு அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், இது தொடா்பாக மாவட்ட தோ்தல் அதிகாரிகளுக்கு உரிய உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. வீடுவீடாக சென்று வாக்காளா்களிடம் நேரில் படிவங்களை அளிக்குமாறு வாக்குச்சாவடி அளவிலான அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஏதாவது புகாா்கள் பெறப்பட்டால், அதை விசாரிப்போம்.

புகாா்கள் தொடா்பாக தோ்தல் ஆணையத்துக்கு அறிக்கைகள் அளிக்கப்படும். தோ்தல் ஆணைய உத்தரவின்படி, எவ்வித விதிமீறல்களுக்கும் வாய்ப்பளிக்காமல் சிறப்பு தீவிர திருத்தப் பணி மேற்கொள்ளப்படும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.