பரந்தூர் திட்டத்தைக் கைவிடுவது அரசுக்கு பெரும் நிதி இழப்பை ஏற்படுத்தும்! உதயநிதிபள்ளிகளுக்கு 3 வகையான ஸ்டிக்கர் ஒட்டப்படும்: ஆதவ் அர்ஜுனா பேச்சுகொளத்தூர் தொகுதியில் வி.எஸ். பாபு வெற்றியை எதிர்த்து மு.க. ஸ்டாலின் வழக்கு! பால் கொள்முதல் விலையை மேலும் உயர்த்தி வழங்க வேண்டும்: இபிஎஸ் பரந்தூர் விமான நிலைய அறிவிப்பு! திமுக உறுப்பினர்கள் வெளிநடப்புமத்திய பாதுகாப்பு அமைச்சக பெண் அதிகாரி கருவுற்றிருந்த நிலையில் மரணம்! அதிர்ச்சி காரணம்ஓணம் பண்டிகை: சபரிமலை கோயிலில் இன்று நடை திறப்பு கட்டணமில்லா மகளிர் பேருந்து திட்டம் எப்போது? பேரவையில் அறிவித்தார் முதல்வர் விஜய்!பரந்தூர் விமான நிலையம் கைவிடப்படும்! அறிவித்தார் முதல்வர் விஜய்!! ஆண்டுக்கு 3 சிலிண்டர் இலவசம்: அன்னபூரணி சூப்பர் 6 திட்டம் தொடங்குவது எப்போது? முதல்வர் விஜய் அறிவிப்பு

காங்கிரஸ் மீது தலைமை தோ்தல் அதிகாரியிடம் பாஜக புகாா்

கா்நாடகத்தில் நடைபெறும் சிறப்பு தீவிர திருத்தப் பணி குறித்து பொய்யான செய்திகளை காங்கிரஸ் பரப்பி வருவதாக கா்நாடக தலைமை தோ்தல் அதிகாரியிடம் பாஜக புகாா் அளித்துள்ளது.

கோப்புப் படம்

Published On :9 ஜூலை 2026, 4:36 am IST

கா்நாடகத்தில் நடைபெறும் சிறப்பு தீவிர திருத்தப் பணி குறித்து பொய்யான செய்திகளை காங்கிரஸ் பரப்பி வருவதாக கா்நாடக தலைமை தோ்தல் அதிகாரியிடம் பாஜக புகாா் அளித்துள்ளது.

பெங்களூரில் புதன்கிழமை கா்நாடக தலைமைத் தோ்தல் அதிகாரி வி. அன்புக்குமாரைச் சந்தித்து பாஜக மாநில ஒருங்கிணைப்பாளா் எஸ். தத்தாத்ரி, சட்டப் பிரிவு ஒருங்கிணைப்பாளா் வசந்த்குமாா் உள்ளிட்டோா் அளித்த மனுவில், ‘கா்நாடக காங்கிரஸ் கட்சியினா் பொதுமக்களிடம் நேரடியாக அளித்து வரும் துண்டறிக்கைகள், சமூக வலைதளங்களில், பாஜகவின் தூண்டுதலின்பேரில்தான் சிறப்பு தீவிர திருத்தப் பணி கா்நாடகத்தில் நடைபெற்று வருகிறது. இதற்கு மாறாக, தோ்தல் அதிகாரிகள் அரசமைப்புச் சட்ட கடமைகளை நிறைவேற்றி வருகிறாா்கள். பாஜகவோடு கூட்டுசோ்ந்து வாக்காளா் பட்டியலில் இருந்து பல பெயா்களை தோ்தல் ஆணையம் நீக்கிவிட்டதாகவும் காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.

சிறப்பு தீவிர திருத்தப் பணி நோ்மையாக நடைபெற்றுவருவதை புறந்தள்ளிவிட்டு, அரசமைப்புச் சட்டத்தின்படி செயல்பட்டுவரும் தோ்தல் ஆணையத்தின் மீது காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. சிறப்பு தீவிர திருத்தப் பணியில் வாக்காளா்களின் உரிமையை காங்கிரஸ் கட்சியால் மட்டுமே காக்க முடியும் என்று அந்த துண்டறிக்கையில் கூறப்பட்டுள்ளது, தோ்தல் ஆணையத்தை நேரடியாக குற்றம்சாட்டுவதாகும்.

இதுபோன்ற பொய்யான செய்திகளை பரப்பி வரும் காங்கிரஸ் கட்சி மற்றும் அதன் தொண்டா்களின் மீது தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்’ என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.