வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு எதிராக காங்கிரஸ், திமுக, இடதுசாரிகள் உள்ளிட்ட 23 கட்சிகள் இணைந்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளன.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் நாடு முழுவதும் படிப்படியாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில் எஸ்ஐஆர் நடவடிக்கையால் வாக்குரிமை பாதிக்கப்படுவதாக குற்றம்சாட்டி இந்தியா கூட்டணியைச் சேர்ந்த 23 கட்சிகள் இணைந்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்துக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.
கடந்த ஜூன் 8 ஆம் தேதி இந்தியா கூட்டணியின் கூட்டம் நடைபெற்றதன் அடிப்படையில் இந்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்தில் பங்கேற்காத திமுக, ஆம் ஆத்மி ஆகிய கட்சிகளும் இந்த கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளன. தமிழகத்தில் திமுக - காங்கிரஸ் கூட்டணி முறிந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
எஸ்ஐஆர் நடவடிக்கை மற்றும் தேர்தல்ரீதியான பிரச்னைகள் குறித்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் அனுப்புவதாக இந்தியா கூட்டணி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு அதன்படி இந்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
Summary
23 opposition parties including dmk write to CJI over ECs SIR process
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
தவெக தலைமையில் உருவாகும் புதிய கூட்டணி!

திமுக இல்லை! இந்தியா கூட்டணியில் யார் யார்?

எஸ்ஐஆர் மேற்கொள்ள தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் உள்ளது; ஆனால்...! உச்சநீதிமன்றம் தீர்ப்பு

திமுக கூட்டணியிலிருந்து விலகாத கட்சிகள் எவை? ஏன்?
விடியோக்கள்
lingam Web Series Review | தென் தமிழகத்தை நடுங்க வைத்த ரௌடி! லிங்கம் | Lakshmi Saravanakumar

Podcast | அதிமுக இழந்த மேலும் ஒரு எம்எல்ஏ! | News & Views | Epi 48
ஆப்பிரிக்க அணிகளின் எழுச்சி! | FIFA | FIFA World Cup 2026 |




