ஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

உ.பி.யில் பூட்டிய வீட்டினுள் ஏசி மெக்கானிக் 4 பேர் சடலங்களாக மீட்பு ! காரணம் என்ன?

உத்தரப் பிரதேசத்தில் பூட்டிய வீட்டினுள் இருந்து ஏசி மெக்கானிக் 4 பேர் சடலங்களாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News image
கோப்புப் படம்
Updated On :6 ஜூலை 2025, 8:56 am

இணையதளச் செய்திப் பிரிவு

உத்தரப் பிரதேசத்தில் பூட்டிய வீட்டினுள் இருந்து ஏசி மெக்கானிக் 4 பேர் சடலங்களாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம், தக்ஷின்புரியில் உள்ள வீட்டின் முதல் தளத்தில் வசிக்கும் தனது உறவினர் அழைப்புகளுக்கு பதிலளிக்கவில்லை என்றும், வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டுள்ளதாகவும் சீஷன் என்பவர் போலீஸாரிடம் சனிக்கிழமை தெரிவித்துள்ளார்.

சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீஸார், வீட்டின் முதல் தளத்தில் நான்கு பேர் மயக்கமடைந்திருப்பதைக் கண்டனர்.

உடனே அவர்கள் அனைவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே ஏற்கெனவே மூவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட நிலையில், ஹசீப் பின்னர் பலியானார் என்று போலீஸார் கூறினார்.

பலியான அனைவரும் உ.பி.யைச் சேர்ந்தவர்கள். அவர்கள் ஒரே அறையில் வசித்து வந்துள்ளனர்.

அறையில் வைக்கப்பட்டிருந்த ஏசியின் சிலிண்டரில் இருந்து வாயு கசிவு ஏற்பட்டு 4 பேரும் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

இருப்பினும், உடற்கூராய்வு அறிக்கை கிடைத்த பிறகே முழுமையான காரணம் தெரியவரும். அவர்கள் கடந்த பல ஆண்டுகளாக அந்த வளாகத்தில் வசித்து வந்துள்ளனர் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

summary

Four air conditioning mechanics died of suspected gas leak at their rented accommodation in south Delhi’s Dakshinpuri area, police said on Saturday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.