
ஷிவமோகாவில் விநாயகர், நாக சிலைகள் அவமதிக்கப்பட்ட நிலையில் பாஜக தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது.
கர்நாடக மாநிலம், ஷிவமோகா நகரின் சாந்திநகர் வார்டில் பங்காரப்பா லேஅவுட்டின் பிரதான சாலையில் அண்மையில் சிலைகள் நிறுவப்பட்டன. ஆனால் அந்த சிலைகளில் நாக சிலை சாலையோர வடிகாலில் கிடந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து சிலைகள் அவமதிக்கப்பட்டதாகக் கூறி அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பினை வெளிப்படுத்தினர்.
இதனால் அங்கு பதற்றம் நிலவியது. மூத்த போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்குச் சென்று உள்ளூர் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக குடியிருப்பாளர்களிடம் அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதாகவும் அவர்கள் உறுதியளித்தனர்.
இதுகுறித்து பாஜக மாநிலத் தலைவர் விஜயேந்திரா வெளியிட்ட எக்ஸ் தளப் பதிவில், ஷிவமோகாவில் சிறு இடைவேளைக்குப் பிறகு, இந்து விரோத சக்திகள் மீண்டும் தங்கள் தவறுகளைத் தொடங்கியுள்ளன. விநாயகர் மற்றும் சேஷநாக சிலைகளை குற்றவாளிகள் அவமதித்தனர். சிலையை சாக்கடையில் வீசியுள்ளனர்.
இந்த தீய சக்திகளுக்கு எதிராக அரசு உடனடியாக கடுமையான நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், அதைத் தொடர்ந்து ஏற்படும் விளைவுகளுக்கு அரசே பொறுப்பேற்க வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
Tension prevailed in the Bangarappa Layout area of Shivamogga's Raggigudda locality on Sunday after unidentified miscreants allegedly desecrated a Ganesha and Naga idols, police sources said.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.