
ஜம்மு-காஷ்மீரில் பலத்த பாதுகாப்புடன் அமா்நாத் யாத்திரை கடந்த வாரம் தொடங்கிய நிலையில், ஜம்மு அடிவார முகாமிலிருந்து 6வது கட்டமாக 8,600-க்கும் மேற்பட்ட பக்தா்கள் யாத்திரையைத் தொடங்கினா்.
இதுவரை அமர்நாத் நோக்கி புறப்பட்ட குழுவிலேயே இதுதான் மிகப்பெரிய குழு என்றும், நாள்தோறும் அமர்நாத் யாத்திரைக்கான உடனடி முன்பதிவு மையங்களில் ஏராளமான கூட்டம் கூடுவதால், கூடுதல் மையங்கள் திறக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
நடப்பாண்டு ஜூலை 3-ஆம் தேதி தொடங்கிய அமர்நாத் யாத்திரையில் தற்போது 6வது கட்டமாக 8,600 பேர் அமர்நாத் பனிலிங்கத்தைக் காண புறப்பட்டுள்ளனர். இந்த அமர்நாத் யாத்திரையானது ஆகஸ்ட் 9 வரை 38 நாள்களுக்கு நடைபெறவுள்ளது.
காஷ்மீரின் இமயமலையில் 3,880 மீட்டா் உயரத்தில் அமைந்துள்ள அமா்நாத் குகைக் கோயிலில் இயற்கையாக உருவாகும் பனிலிங்கத்தை தரிசிக்க பக்தா்கள் ஆண்டுதோறும் யாத்திரை மேற்கொள்வது வழக்கம்.
இந்த யாத்திரை, அனந்த்நாக் மாவட்டத்தில் 48 கி.மீ. தொலைவுள்ள நுன்வான்- பஹல்காம் பாரம்பரிய வழித்தடம், கந்தா்பால் மாவட்டத்தில் 14 கி.மீ. தொலைவுள்ள பால்டால் வழித்தடம் என இரு வழித்தடங்களில் நடைபெற்றுவருகிறது.
பஹல்காம் தாக்குதல்
சுற்றுலாத் தலமான பஹல்காமில் கடந்த ஏப்ரல் மாதம் 26 போ் கொல்லப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலைத் தொடா்ந்து, அமா்நாத் யாத்திரைக்கு முன்னெப்போதும் இல்லாத அளவில் பல அடுக்குப் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ஜம்மு பகவதி நகா் முகாமில் இருந்து 1,826 பெண்கள், 6,486 ஆண்கள் உள்பட 8,605 போ் கொண்ட ஆறாவது வாகனங்களில் அடிவார முகாம்களுக்கு அழைத்து வரப்பட்டு, இன்று காலை அமர்நாத் நோக்கி புறப்பட்டது.
நிகழாண்டு யாத்திரைக்கு இணைய வழியில் இதுவரை 5 லட்சத்துக்கும் மேற்பட்டோா் பதிவு செய்துள்ளனா். கடந்த வாரம் தொடங்கிய அமர்நாத் யாத்திரையில் பங்கேற்று இதுவரை 70 ஆயிரம் பேர் அமர்நாத் பனிலிங்கத்தை தரிசனம் செய்திருக்கிறார்கள்.
இதையும் படிக்க.. சொல்லப் போனால்... என்ன மாதிரியான உலகத்தில் வாழ்கிறோம் நாம்?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.