ஏர் இந்தியா விமான விபத்து: மேடே அழைப்புக்கு முன் நடந்தது என்ன? இறுதி வினாடிகள்

ஏர் இந்தியா விமான விபத்து நேரிட்டபோது மேடே அழைப்புக்கு முன் நடந்தது என்ன? இறுதி வினாடிகள் பற்றிய தகவல்.
ஏர் இந்தியா விமானம்
ஏர் இந்தியா விமானம்Edited photo
Published on
Updated on
1 min read

புது தில்லி: அகமதாபாத் ஏா் இந்தியா விமான விபத்து தொடா்பாக விசாரித்து வரும் விமான விபத்து புலனாய்வு அமைப்பு (ஏஏஐபி) அதன் முதல்கட்ட அறிக்கையை தாக்கல் செய்திருக்கிறது.

கடந்த ஜூன் 12ஆம் தேதி, குஜராத் மாநிலம், அகமதாபாதில் இருந்து லண்டன் புறப்பட்ட ஏா் இந்தியாவின் ‘ஏஐ 171’ விமானம், வானில் பறக்கத் தொடங்கிய சில வினாடிகளில் ஒரு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் விழுந்து, வெடித்துச் சிதறியது. நாட்டை உலுக்கிய விமான விபத்தில், விமானப் பயணிகள் 241 போ் உள்பட 260 போ் பலியாகினர்.

முதற்கட்ட அறிக்கையில், விமானத்துக்கு எரிபொருளை வழங்குவதற்கான சுவிட்சுகள், ரன் என்பதில் இல்லாமல் கட்-ஆப் என்ற நிலையில் இருந்ததாகவும், இதனால், என்ஜின்களுக்கு எரிபொருள் செல்வது நிறுத்தப்பட்டு, இரு என்ஜின்களும் செயலற்றுப் போயிருப்பதாகக் கூறப்படுகிறது.

மேலும், விபத்து மதியம் 1.40 மணியளவில் நிகழ்ந்திருக்கும் நிலையில், 11.17 மணியிலிருந்து என்ன நடந்தது என்பது குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.

அதாவது,

புது தில்லியிலிருந்து ஏர் இந்தியா 423 விமானம் ஆகமதாபாத் வந்துள்ளது. பயணிகளை இறக்கிவிட்டு, ஏற வேண்டிய பயணிகளுடன் விமானம் புறப்படத் தயாரானது.

சரியாக மதியம் 1.18 மணிக்கு விமான நிலையத்திலிருந்து புறப்படத் தயாரானது.

1.25 மணிக்கு வழித்தடத்தில் பயணிப்பதற்கான அனுமதி விமானத்திலிருந்து வந்திருக்கிறது. அதற்கு விமான கட்டுப்பாட்டு அறையிலிருந்து அனுமதி வந்துள்ளது.

1.32 மணிக்கு விமானம், தரைக் கட்டுப்பாட்டிலிருந்து டவர் கட்டுப்பாட்டுக்கு மாற்றப்பட்டது.

1.37.33 மணிக்கு விமானம் புறப்பட அனுமதி வழங்கப்படுகிறது.

01.37.37 மணிக்கு விமானம் புறப்படுகிறது.

01.38.39 மணிக்கு விமானம் தரையிலிருந்து எழும்புகிறது. விமானத்தின் தரை சென்சார், வான் சென்சார் நிலைக்கு மாறுகிறது.

01.38.42 மணிக்கு விமானம் 180 கிலோ மீட்டர் தொலைவு என்ற வேகத்தை அடைகிறது. பிறகு, இரண்டு என்ஜின்களுக்கும் அடுத்தடுத்து எரிபொருள் செல்வதற்கான சுவிட்சுகள் இரண்டும் 1 வினாடிக்குள் கட்-ஆப் என்ற நிலைக்கு மாற்றப்படுகிறது. என்ஜின்களுக்கு எரிபொருள் வருவது தடைபட்டதும், அதனால் மேலெழும்ப முடியவில்லை.

முதற்கட்ட விசாரணை அறிக்கை - முழுமையாக

இணைப்பு
PDF
Preliminary Report VT-ANB
பார்க்க

அப்போது விமானிகளின் அறையில் இருக்கும் குரல் பதிவில், ஒரு விமானி, ஏன் எரிபொருளை சுவிட்சை அணைத்தீர்கள் என்று கேட்கிறார், அதற்கு மற்றொரு விமானி நான் எதையும் செய்யவில்லை என்கிறார். அதற்குள், விமானம் நிலைப்பாட்டை இழந்து கீழே இறங்குகிறது. மருத்துவக் கல்லூரி வளாகத்தில் விழுந்து விபத்து நேரிடுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com