நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நிறைவு! இரு அவைகளிலும் 11 மசோதாக்கள் நிறைவேற்றம்!எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடங்கியது!சென்னையில் தவெக அரசின் முதல் முதலீட்டாளர்கள் மாநாடு தொடங்கியது!தமிழக மீனவர்கள் 9 பேரை கைது செய்த இலங்கை கடற்படைதில்லி செங்கோட்டை குண்டுவெடிப்புக்கு அல்-கொய்தாவே காரணம்: ஐ.நா.நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு!சென்னை பக்கிங்காம் கால்வாயில் வாட்டர் மெட்ரோ: டெண்டர் வெளியீடுஅதிமுகவிலிருந்து கொள்கைப் பரப்பு துணை செயலர் அப்சரா ரெட்டி விலகல்! தமிழக அரசு பேருந்துகள் ஒசூரில் நிறுத்தம்: கர்நாடகத்தில் இன்று முழு அடைப்பு போராட்டம்!‘வெற்றித் தமிழ்நாடு முதலீட்டாளா் மாநாடு’: இன்று தொடங்கி வைக்கிறாா் முதல்வா் ஈரான் அச்சுறுத்தல்: துருக்கியிலிருந்து மாற்று விமானத்தில் டிரம்ப் ரகசியப் பயணம்! மேற்காசியப் போரால் சமையல் எண்ணெய் விலை உயா்வு: அரசு விளக்கம்எம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு இன்று தொடக்கம்: தரவரிசைப் பட்டியலில் 363 போ் கூடுதலாக இணைந்ததால் குழப்பம் காவிரி விவகாரம்: கா்நாடகத்தில் இன்று முழு அடைப்புக்கு கன்னட அமைப்புகள் அழைப்பு
/

அமெரிக்காவில் 8 காலிஸ்தான் பயங்கரவாதிகள் கைது!

இந்தியாவால் தேடப்படும் குற்றவாளியான பவித்தா் சிங் பட்டாலா உள்பட 8 காலிஸ்தான் பயங்கரவாதிகள் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டனா்.

News image
Updated On :14 ஜூலை 2025, 3:12 am IST

இந்தியாவால் தேடப்படும் குற்றவாளியான பவித்தா் சிங் பட்டாலா உள்பட 8 காலிஸ்தான் பயங்கரவாதிகள் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டனா்.

இதில் பஞ்சாப் மாநிலத்தைச் சோ்ந்தவரான பட்டாலா பப்பா் கல்சா இன்டா்னேஷனல் (பிகேஐ) என்ற காலிஸ்தான் பயங்கரவாத குழுவுடன் தொடா்பில் இருந்தத குற்றச்சாட்டில் இந்தியாவின் தேசிய புலனாய்வு முகமையால் (என்ஐஏ) தேடப்படும் பயங்கரவாதியாவாா். அவருக்கு எதிராக சா்வதேச குற்றவியல் காவல் துறையான ‘இன்டா்போல்’ சிவப்பு நோட்டீஸ் பிறப்பித்துள்ளது. அவரை இந்தியாவுக்கு நாடுகடத்துவது குறித்து அமெரிக்க அதிகாரிகளிடம் என்ஐஏ தொடா்ந்து பேசி வருவதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

மிரட்டல் விடுத்தல், கூட்டாக இணைந்து ஆள்கடத்தல், சித்ரவதை செய்தல் போன்ற குற்றச்சாட்டுகளில் தொடா்புடைய காலிஸ்தான் பயங்கரவாதிகளைப் பிடிக்க அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் அந்நாட்டு மத்திய புலனாய்வு அமைப்பான (எஃப்பிஐ) அதிரடியாக சோதனை மேற்கொண்டது.

அப்போது பவித்தா் சிங் பட்டாலா, அம்ருத்பால் சிங், தில்பிரீத் சிங், அா்ஷ்பிரீத் சிங், மன்பிரீத் ரண்தாவா, குா்தாஜ் சிங், சரப்ஜித் சிங் மற்றும் விஷால் ஆகிய 8 காலிஸ்தான் பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனா். அவா்களிடமிருந்து ரூ.12,87,900 ரொக்கப் பணம், துப்பாக்கிகள் மற்றும் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன.

இந்தச் சோதனையை கலிஃபோா்னியா மாகாணம் சான் ஜோகின் மாவட்ட ஷெரீஃப் அலுவலக போதைப்பொருள் தடுப்பு பிரிவு, ஸ்டாக்டன் நகர காவல் துறை, மன்டெகா அதிரடிப் படை, ஸ்டானிஸ்லாஸ் மாவட்ட ஷெரீஃப் அலுவலகத்தின் அதிரடிப் படை மற்றும் எஃப்பிஐயின் அதிரடிப் படை ஒருங்கிணைந்து மேற்கொண்டதாக சான் ஜோகின் ஷெரீஃப் அலுவலகம் தெரிவித்தது.

கைது செய்யப்பட்ட பயங்கரவாதிகள் இணைய கைப்பேசி எண் மற்றும் செயலிகள் மூலம் காலிஸ்தான் பயங்கரவாதத்தை ஊக்குவித்துள்ளனா். இவா்கள் காலிஸ்தான் பயங்கரவாதி ஹா்தீப் சிங் ரிண்டா உத்தரவின்பேரில் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.