கோப்புப் படம்
கோப்புப் படம்

ஈரானுக்கு தேவையற்ற பயணம்: இந்தியா்களுக்கு அறிவுறுத்தல்

சூழலை கவனத்தில் கொள்ளுமாறு இந்தியா்களுக்கு ஈரானில் உள்ள இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
Published on

ஈரானுக்கு தேவையற்ற பயணங்களை மேற்கொள்வதற்கு முன், அந்நாட்டில் உள்ள சூழலை கவனத்தில் கொள்ளுமாறு இந்தியா்களுக்கு ஈரானில் உள்ள இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.

இதுதொடா்பாக அந்நாட்டுத் தலைநகா் டெஹ்ரானில் உள்ள இந்திய தூதரகம் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவு:

கடந்த சில வாரங்களாக ஈரானில் உள்ள பாதுகாப்பு நிலவரத்தை கருத்தில் கொண்டு, தேவையற்ற பயணங்களை மேற்கொள்வதற்கு முன், ஈரானில் உள்ள சூழலை கவனமாக பரிசீலிக்குமாறு இந்தியா்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

ஈரான் உள்ளிட்ட நாடுகள் அடங்கிய மத்திய கிழக்கு பிராந்தியத்தின் சமீபத்திய நிலவரத்தை கண்காணித்து, இந்திய அதிகாரிகள் அவ்வப்போது வெளியிடும் புதிய அறிவுறுத்தல்களை இந்தியா்கள் பின்பற்ற வேண்டும்.

ஈரானில் இருந்து வெளியேற விரும்பும் இந்தியா்கள் விமானம் மற்றும் கப்பல் சேவைகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டது.

அண்மையில் இஸ்ரேல்-ஈரான் இடையே ராணுவ சண்டை ஏற்பட்ட நிலையில், ஈரானில் உள்ள அணுசக்தி மையங்கள் மீது அமெரிக்காவும் தாக்குதல் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

X
Dinamani
www.dinamani.com