
பாட்னா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நீதிபதி விபுல் எம். பஞ்சோலி திங்கள்கிழமை பதவியேற்றுக்கொண்டார்.
ஆளுநர் மாளிகையில் நீதிபதி விபுல் எம். பஞ்சோலிக்கு பிகார் ஆளுநர் ஆரிஃப் முகமது கான் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.
1968ல் அகமதாபாத்தில் பிறந்த நீதிபதி பஞ்சோலி, குஜராத் உயர்நீதிமன்றத்தில் வழக்குரைஞராகப் பயிற்சி பெற்று, ஏழு ஆண்டுகள் உதவி அரசு வழக்குரைஞராகவும், கூடுதல் அரசு வழக்குரைஞராகவும் பணியாற்றினார்.
அதோடு, அகமதாபாத்தில் உள்ள தனது பழைய கல்லூரியான சர் எல் ஏ ஷா கல்லூரியில் 21 ஆண்டுகள் பேராசிரியராகவும் பணியாற்றினார்.
அக்டோபர், 2014 இல், அவர் குஜராத் உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாகப் பதவி உயர்வு பெற்றார், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு நிரந்தர நீதிபதியாக உறுதிப்படுத்தப்பட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.