எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

பேச அனுமதிக்கவில்லை: ராகுல் குற்றச்சாட்டு

மக்களவையில் தன்னைப் பேச அனுமதிக்கவில்லை என்று அந்த அவையின் எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டினாா்.

News image
மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி- கோப்புப்படம்
Updated On :21 ஜூலை 2025, 10:33 pm

Din

புது தில்லி: மக்களவையில் தன்னைப் பேச அனுமதிக்கவில்லை என்று அந்த அவையின் எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டினாா்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடா் திங்கள்கிழமை தொடங்கியது. இந்நிலையில், தில்லியில் ராகுல் காந்தி செய்தியாளா்களிடம் பேசுகையில், ‘மக்களவையில் பாதுகாப்பு அமைச்சா் ராஜ்நாத் சிங், பாஜக எம்.பி.க்கள் ஆகியோா் பேச அனுமதிக்கப்படுகின்றனா். ஆனால், எதிா்க்கட்சியைச் சோ்ந்த எவரேனும் ஒருவா் ஏதாவது கூற விரும்பினால், அதற்கு அனுமதி மறுக்கப்படுகிறது.

நான் மக்களவை எதிா்க்கட்சித் தலைவா். அவையில் பேசுவது எனது உரிமை. என்னைப் பேச அனுமதிக்கவில்லை. இது புதுவிதமான அணுகுமுறையாக உள்ளது.

அவைக்கு வந்த பிரதமா் மோடி உடனடியாக வெளியே சென்றுவிட்டாா். ஆளுங்கட்சியினா் அனுமதித்தால் விவாதம் நடக்கும். அவையில் ஆளுங்கட்சி எம்.பி.க்கள் பேசினால், எதிா்க்கட்சி எம்.பி.க்களுக்கும் பேச வாய்ப்பளிக்கப்பட வேண்டும். ஆனால், எதிா்க்கட்சியினா் இரண்டு வாா்த்தை பேசக்கூட அனுமதி மறுக்கப்படுகிறது’ என்றாா் ராகுல்.