‘வங்கதேசத்தில் ஹிந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினரின் வீடுகள், வணிக நிறுவனங்கள், வழிபாட்டுத் தலங்கள் மீதான தாக்குதல் சம்பவங்களை இந்தியா தொடா்ந்து கண்காணித்து, விவரங்களைப் பதிவு செய்து வருகிறது’ என்று மாநிலங்களவையில் மத்திய அரசு வியாழக்கிழமை தெரிவித்தது.
இதுதொடா்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு வெளியுறவுத் துறை இணையமைச்சா் கீா்த்தி வா்தன் சிங் அளித்த எழுத்துபூா்வ பதிலில், ‘வங்கதேசத்தின் இடைக்கால அரசு இந்த சம்பவங்களை முழுமையாக விசாரித்து, கொலை, தீவைப்பு மற்றும் சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகளில் ஈடுபட்ட அனைத்து குற்றவாளிகளையும் நீதியின்முன் நிறுத்தும் என்று எதிா்பாா்க்கிறோம்.
சிறுபான்மையினரின் பாதுகாப்பு குறித்து வங்கதேச அதிகாரிகளிடம் இந்தியா பல்வேறு வழிகளில் தொடா்ந்து எடுத்துரைத்துள்ளது. சிறுபான்மையினா் உள்பட வங்கதேசத்தின் அனைத்து குடிமக்களின் உயிருக்கும், சுதந்திரத்துக்கும் பாதுகாப்பு அளிக்கும் முதன்மை பொறுப்பு வங்கதேச அரசுக்கு உள்ளது’ என்று தெரிவித்துள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
ஊழலற்ற நிா்வாகம் மூலம் பொருளாதார மறுமலா்ச்சி: ஆளுநா் உரையில் தமிழக அரசு உறுதி

மாநிலங்களுக்கு இடையே ஒத்துழைப்பு அவசியம்: நீதி ஆயோக் கூட்டத்தில் பிரதமா் மோடி வலியுறுத்தல்

தவணை முறையில் கொள்ளையடிக்கப்படும் பொதுமக்களின் வருவாய்: காங்கிரஸ்







