
ஏர் இந்தியா விமானம், பிஜே மருத்துவக் கல்லூரி மீது விழுந்தபோது, தன்னுடைய எட்டுமாதக் குழந்தை, தன்னையே கேடயமாக்கிக் கொண்டு பாதுகாத்தார் மணீஷா கச்சாடியா.
இப்போது, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குழந்தைக்கு, தீயில் கருகிய தோலுக்கு மாற்றாக, தன்னுடைய தோலை-க் கொடுத்து மீண்டும் தாயின் கருணைக்கு உதாரணமாக மாறியிருக்கிறார்.
கடந்த சில நாள்களாக பிள்ளைகளைக் கொல்லும் பெண்களின் செய்திகள் அதிகம் வைரலாக நிலையில், தற்போது மணீஷாவின் நெகிழ்ச்சியான கதை பலரையும் கண்கலங்க வைக்கிறது.
ஜூன் 12ஆம் தேதி நிகழ்ந்த இந்த மிகப் பயங்கர விபத்தில் உயிர் பிழைத்த ஒரு சிலரில் மணீஷாவும் அவரது மகனும் அடங்குவர். இருவரும் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில், தீக்காயங்களுடன் போராடிய தன்னுடைய மகன் தயான்ஷ்-க்கு தனது தோலைக் கொடுத்திருக்கிறார் மணீஷா இருவரும் பூரண நலமடைந்து மருத்துவமனையில் இருந்த வீடு திரும்பியிருக்கிறார்கள்.
மணீஷாவின் கணவர் கபில், முதுகலை மருத்துவம் பயின்றுவிட்டு, அங்கு சூப்பர் ஸ்பெஷாலலிட்டி மாணவராகவும் மருத்துவராகவும் இருந்து வருகிறார். விபத்து நேரிட்டபோது, கபில் மருத்துவமனையில் பணியில் இருந்தார்.
ஒரு வினாடியில் அப்பகுதியே கரும்புகையால் மூடப்பட்டது. தன்னுடைய ஒரே நோக்கம் குழந்தையைக் காப்பாற்றுவது என்பது மட்டுமே மணீஷாவுக்கு அப்போது இருந்தது. குழந்தையைத் தூக்கிக் கொண்டு தன்னுடைய கைகளுக்குள் மறைத்தபடி வெளியே ஓடியிருக்கிறார். இருவரையும் மீட்டபோது மணீஷாவுக்கு 25 சதவீத காயமும், குழந்தைக்கு 36 சதவீத காயமும் இருந்தது.
குழந்தைக்கு ஏற்பட்ட காயத்தால் பலக்கட்ட சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. குழந்தையின் வயது காரணத்தால் உடல்நலம் தேறுவதில் பல சிக்கல்கள் இருந்தன. அவனது காயங்களை ஆற்ற தோல் தேவைப்பட்டது. அதனை அவரது தாயே கொடுத்தார். அவர் மீண்டும் ஒரு முறை தன் குழந்தையை பெற்றெடுத்தது போல் இருந்தது அப்போது என்கிறார்கள் மருத்துவர்கள்.
அவ்வளவு மோசமான விபத்திலிருந்து மீட்கப்பட்ட மிகக் குறைந்த வயது நபராக இந்தக் குழந்தை இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க.. நீதி கிடைக்கும்வரை கவினின் உடலை வாங்க மாட்டோம்: பெற்றோர் திட்டவட்டம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.