
"பயங்கரவாதம் ஒருபோதும் காவி நிறமாக இருந்ததில்லை, இனியும் இருக்காது" என மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் கூறினார்.
2008 மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் பாஜகவின் முன்னாள் எம்பி பிரக்யா சிங் உள்பட ஏழு பேரை விடுதலை செய்து மும்பை என்ஐஏ நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு அவர் எதிர்வினையாற்றினார்.
கடந்த 2008 செப்டம்பர் 29இல் மகாராஷ்டிரத்தின் மாலேகான் பகுதியில் உள்ள மசூதிக்கு அருகே நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளிலிருந்த வெடிகுண்டு வெடித்தது. இந்தச் சம்பவத்தில் 6 உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
சிறப்பு நீதிமன்றம் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஏழு பேரையும் விடுவித்து, அவர்களுக்கு எதிராக நம்பகமான, உறுதியான ஆதாரங்கள் இல்லை என்று கூறியது.
இதுதொடர்பாக ஃபட்னவீஸ் எக்ஸ் பதிவில் கூறியதாவது,
பயங்கரவாதம் ஒருபோதும் காவி நிறத்தில் இருந்ததில்லை, இனியும் இருக்காது என்று அவர் கூறினார்.
மூத்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் மத்திய உள்துறை அமைச்சருமான சுஷில்குமார் ஷிண்டே தீர்ப்பு குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்.
தாக்கூர் மற்றும் புரோஹித் உள்பட 7 குற்றவாளிகளையும் விடுவித்த என்ஐஏ தீர்ப்பை தங்கள் கட்சி வரவேற்பதாக அவர் கூறினார்.
எந்தவொரு இந்துவும் பயங்கரவாதியாக இருக்க முடியாது என்றும், அது சரி என்று நிரூபிக்கப்பட்டுள்ளது என்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நாடாளுமன்றத்தில் கூறியதாக சிவசேனா செய்தித் தொடர்பாளர் கிருஷ்ணா ஹெக்டே கூறினார்.
மகாராஷ்டிரா நீர்வள அமைச்சரும் பாஜக தலைவருமான ராதாகிருஷ்ண விகே பாட்டீல் தீர்ப்பை வரவேற்று, இந்துத்துவாவை "பயங்கரவாதி" என்று முத்திரை குத்தப்பட்டு, உணர்வுகள் புண்படுத்தப்பட்டதாகக் கூறினார். ஆன்மிகத்தை புண்படுத்தும் முயற்சி நடந்ததாக அவர் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.