
உத்தரப் பிரதேசத்தில் மண்டபத்தில் திருமண விழா நடத்தியதற்காக தலித் குடும்பத்தினரை கும்பல் ஒன்று தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேசத்தின் ரஸ்ராவில் உள்ள மண்டபம் ஒன்றில் தலித் சமூகத்தைச் சேர்ந்தவரின் திருமண விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றிருக்கிறது. அப்போது அங்கு வந்த கும்பல் தடி மற்றும் ராட் ஆகியவற்றைக் கொண்டு தலித் குடும்பத்தினரை தாக்கியுள்ளனர்.
இந்த சம்பவத்தில் கௌதமின் உறவினர்களான அஜய் குமார் மற்றும் மனன் காந்த் ஆகியோர் பலத்த காயமடைந்தனர்.
பாதிக்கப்பட்டவரின் சகோதரர்களில் ஒருவரான ராகவேந்திர கௌதம் அளித்த புகாரின் அடிப்படையில், சுமார் 20 பேர் கொண்ட குழு இரவு 10.30 மணியளவில் திருமண மண்டபத்திற்குள் நுழைந்து அங்கு திருமணத்தை நடத்திக் கொண்டிருந்தவர்களைத் தாக்கியதாக முதல் தகவல் அறிக்கை கூறுகிறது.
மேலும் தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் மண்டபத்தில் எப்படி திருமணத்தை நடத்த முடியும்? என்று தாக்குதல் நடத்தியவர்கள் கூறியதாக இந்த வழக்கில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாக்குதல் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருவதாக ரஸ்ரா காவல் நிலையப் பொறுப்பாளர் விபின் சிங் தெரிவித்தார்.
இருப்பினும் இந்த வழக்கில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.