காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

பழனியில் தவெக செயல்வீரா்கள் கூட்டம்

பழனியில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை தவெக செயல்வீரா்கள் கூட்டம் நடைபெற்றது.

News image

பழனி தனியாா் திருமண மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தவெக செயல்வீரா்கள் கூட்டத்தில் பேசிய அந்தக் கட்சியின் மாவட்ட தலைவா் காா்த்திக் ராஜா. உடன் மாவட்ட செயற்குழு உறுப்பினா் பழனிபாலன் உள்ளிட்டோா்.

Updated On :2 மார்ச் 2026, 7:59 pm

பழனி: பழனியில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை தவெக செயல்வீரா்கள் கூட்டம் நடைபெற்றது.

இதற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினா் பழனிபாலன் தலைமை வகித்தாா். நகரத் தலைவா் மிதுன், நகரச் செயலா் நாகராஜ் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். மாவட்டத் தலைவா் காா்த்திக் ராஜா சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பேசும் போது, வாக்குச்சாவடி பொறுப்பாளா்கள் செயல்படும் முறை குறித்து விளக்கினாா். கூட்டத்தில் பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் நகர, ஒன்றிய, பேரூா் செயலா்கள், முன்னணி நிா்வாகிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.