கூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

ஒரே நாடு, ஒரே கணவன் திட்டமா? பாஜகவை விமர்சித்த பஞ்சாப் முதல்வர்!

ஆபரேஷன் சிந்தூர் பெயரில் வாக்கு அரசியலில் ஈடுபடும் பாஜக - பகவந்த் மான்

News image

பகவந்த் மான்

படம் | பகவந்த் மான் எக்ஸ் பதிவு

Updated On :3 ஜூன் 2025, 12:00 pm

DIN

புது தில்லி: ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைகளை தேர்தல் பிரசாரத்தில் பாஜக பயன்படுத்தி வாக்கு அரசியலில் ஈடுபடுவதாக பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் பேசியுள்ளார்.

பஞ்சாப் மாநிலத்திலுள்ள லூதியாணாவில் இடைத்தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதையொட்டி, அங்கு அனைத்துக் கட்சிகளும் படுதீவிரமாக தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ளன. இந்த நிலையில், பாஜகவினர் ஆபரேஷன் சிந்தூர் பெயரில் மக்களிடம் வாக்கு சேகரிப்பதாக பரவலாக பேசப்படுவது குறித்து முதல்வர் பகவந்த் மானிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்து பேசிய பகவந்த் மான் கூறியிருப்பதாவது: ”ஆபரேஷன் சிந்தூர் பெயரில் பாஜக வாக்கு சேகரிக்கிறது. இவர்கள்(பாஜக) ‘சிந்தூரை(நெற்றியில் இடும் திலகம்)’ கேலிக்குரியதொரு விஷயமாக மாற்றியுள்ளனர்.

ஒவ்வொரு வீட்டுக்கும் அவர்கள் சிந்தூரத்தை அனுப்பி வைக்கின்றனர். பிரதமர் மோடியின் பெயரால் நீங்கள் உங்கள் நெற்றியில் திலகமிட்டுக் கொள்வீர்களா?

இது என்ன ‘ஒரே நாடு, ஒரே கணவன் திட்டமா?’” என்று விமர்சித்துள்ளார்.

பகவந்த் மான் தெரிவித்திருக்கும் கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து பாஜக தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது: ”பகவந்த் மான் வரம்ம்புகளை மீறி பேசியிருக்கிறார். அவருக்கு பொறுப்புணர்வு துளியளவும் இல்லை. இந்திய ராணுவத்தை அவர் விமர்சித்திருக்கிறார். புனிதமானதாக கருதப்படும் சிந்தூரத்தையும் கொச்சைப்படுத்திவிட்டார். தேச நலனுக்கு எதிரான உணர்வை அவர் வெளிப்படுத்தியிருக்கிறார்.

இதையடுத்து அவர் உடனடியாக பதவி விலக வேண்டும்” என்று எதிர்வினையாற்றப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.