டிரம்ப்பிடம் சரணடைந்துவிட்டார் பிரதமர் மோடி! - ராகுல் விமர்சனம்

அமெரிக்க அதிபர் டிரம்ப்பிடம் பிரதமர் மோடி சரணடைந்துவிட்டதாக ராகுல் காந்தி கூறியிருப்பதைப் பற்றி...
ராகுல் காந்தி..
ராகுல் காந்தி..
Published on
Updated on
1 min read

அமெரிக்க அதிபர் டிரம்ப்பிடம் பிரதமர் நரேந்திர மோடி சரணடைந்துவிட்டதாக ராகுல் காந்தி தெரிவித்திருக்கிறார்.

மத்தியப் பிரதேசத் தலைநகர் போபாலில் நடந்த காங்கிரஸ் தொழிலாளர் மாநாட்டில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்பியுமான ராகுல் காந்தி உரையாற்றினார்.

இந்தக் கூட்டத்தில் ராகுல் காந்தி பேசுகையில், “ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்குப் பிறகு இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போரை நிறுத்திட்டதாக வாஷிங்டன் கூறியிருக்கிறது.

அமெரிக்க அதிபரிடமிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்ததும் போதும் பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார். வரலாறு இதற்கு சாட்சி. இதுதான் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ்ஸின் குணம். மற்றவர்களுக்கு அவர்கள் எப்போதும் தலைவணங்குகிறார்கள்.

இந்தக் கூட்டத்தில் ராகுல் காந்தி பேசுகையில், “ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்குப் பிறகு இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போரை நிறுத்திட்டதாக வாஷிங்டன் கூறியிருக்கிறது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புடனான தொலைபேசி அழைப்பில் பிரதமர் நரேந்திர மோடி அவரிடம் சரணடைந்துவிட்டார்.

அமெரிக்க அதிபரிடமிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்ததும் போதும் பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார். வரலாறு இதற்கு சாட்சி. இதுதான் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ்ஸின் குணம். மற்றவர்களுக்கு அவர்கள் எப்போதும் தலைவணங்குகிறார்கள்.

1971 ஆம் ஆண்டில் வங்கதேச விடுதலைப் போரின் போது முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, அமெரிக்காவின் கடற்படை வந்தாலும் நான் செய்ய வேண்டியதைச் செய்வேன் என்றார். அப்போது அமெரிக்காவின் அச்சுறுத்தலையும் மீறி பாகிஸ்தானை இரண்டாக உடைத்தவர் இந்திரா காந்தி.

காங்கிரஸ் கட்சி ஒருபோதும் சரணடையாது. அதற்கு காந்தி, நேரு, சர்தார் வல்லபபாய் பட்டேல் ஆகியோர் யாருக்கும் சரணடைந்தது கிடையாது. அவர்கள் வல்லரசு நாடுகளுக்கு எதிராகப் போராடுபவர்கள்” என்றார் ராகுல் காந்தி.

இதையும் படிக்க: ஐபிஎல் நிறைவு விழாவில் இந்திய ஆயுதப்படைகளுக்கு மரியாதை!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com