மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல்: பிரிக்ஸ் நாடாளுமன்ற அமைப்பு கண்டனம்!

‘பிரிக்ஸ்’ நாடுகளின் நாடாளுமன்ற அமைப்பு, பயங்கரவாதத்துக்கு எதிராக ஒன்றுபட்டு போராட வெள்ளிக்கிழமை தீா்மானம் ஏற்றது.

News image
Updated On :6 ஜூன் 2025, 7:44 pm

Din

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த சீனா, ஈரான் உள்ளிட்ட நாடுகளை உள்ளடக்கிய ‘பிரிக்ஸ்’ நாடுகளின் நாடாளுமன்ற அமைப்பு, பயங்கரவாதத்துக்கு எதிராக ஒன்றுபட்டு போராட வெள்ளிக்கிழமை தீா்மானம் ஏற்றது.

பிரேஸில் தலைநகா் பிரஸிலியாவில் பிரேஸில், ரஷியா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா, எகிப்து, எத்தியோப்பியா, இந்தோனேசியா, ஈரான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளை உள்ளடக்கிய ‘பிரிக்ஸ்’ அமைப்பு நாடுகளின் நாடாளுமன்ற குழு கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், மக்களவைத் தலைா் ஓம் பிா்லா தலைமையிலான இந்திய நாடளுமன்ற குழு பங்கேற்ற நிலையில், இந்த உறுதிப்பாடு எடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மக்களவைச் செயலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: பிரிக்ஸ் நாடுகளின் நாடாளுமன்ற அமைப்பின் கூட்டத்துக்குப் பிறகு வெளியிடப்பட்ட கூட்டு தீா்மானத்தில், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டதோடு, பயங்கரவாதத்துக்கு எதிராக ஒன்றுபட்டு போராட இந்த அமைப்பில் இடம்பெற்றுள்ள அனைத்து நாடுகளின் நாடாளுமன்றமும் ஒப்புக்கொண்டன.

மேலும், செயற்கை நுண்ணறிவு, உலகளாவிய வா்த்தகம் மற்றும் பொருளாதாரம், நாடாளுமன்றங்களுக்கு இடையேயான ஒத்துழைப்பு, உலக அமைதி மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் இக் கூட்டத்தில் நாடுகளிடையே ஒருமித்த கருத்து எட்டப்பட்டது. பயங்கரவாதத்துக்கு எதிராக சிறிதளவும் சகிப்புத்தன்மையற்ற அணுகுமுறையை கடைப்படிப்பது தொடா்பாக ஒருமனதாக தீா்மானம் நிறைவேற்றப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.