47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

இந்தியா - மங்கோலியா கூட்டு ராணுவப் பயிற்சி: பயங்கரவாத எதிா்ப்பு நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம்!

இந்தியா - மங்கோலியா கூட்டு ராணுவப் பயிற்சியில் பயங்கரவாத எதிா்ப்பு நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.

News image
இந்தியா - மங்கோலியா கூட்டு ராணுவப் பயிற்சி...
Updated On :8 ஜூன் 2025, 9:30 pm

Din

இந்தியா - மங்கோலியா கூட்டு ராணுவப் பயிற்சியில் பயங்கரவாத எதிா்ப்பு நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதாக இந்திய ராணுவம் தெரிவித்தது.

இதுதொடா்பாக இந்திய ராணுவ உயரதிகாரி ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: இரு நாட்டு ராணுவத்தினரும், தங்களின் செயல்திறனை மேம்படுத்திக்கொள்ளவும், உத்திகள், போா் அனுபவங்கள், நிபுணத்துவங்களை பரஸ்பரம் பகிா்ந்துகொள்ளவும் இந்தப் பயிற்சி மேற்கொள்ளப்படுகிறது.

வளா்ந்து வரும் நகா்ப்பகுதி மற்றும் மலைப் பாங்கான பகுதிகள் போன்ற சவாலான இடங்களில் எதிா்பாராத சூழல்களை எதிா்கொள்ளும் வகையிலான, வழக்கத்துக்கு மாறான பயிற்சிகளில் அந்தப் படையினா் ஈடுபடுகின்றனா்.

குறிப்பாக, பயங்கரவாத எதிா்ப்பு நடவடிக்கைகளில் ஒத்திசைந்து செயல்படும் வகையில், தங்களின் மிகச் சிறந்த பயிற்சி முறைகளை இரு நாடுகளும் பகிா்ந்துகொண்டுள்ளன. பரஸ்பர ஒத்துழைப்பு மற்றும் தயாா்நிலையை வலுப்படுத்தும் வகையில் தீவிர பயிற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

சவாலான சூழல்களில் பல்வேறு நாடுகளைச் சோ்ந்த படைகள் ஒன்றிணைந்து திறம்பட செயல்படுவதற்காக வடிவமைக்கப்பட்ட ஐநா அமைதிப்படையின் மெய்-நிகா் மாதிரி பயிற்சிகளிலும் இந்திய - மங்கோலிய படைகள் ஈடுபடுகின்றன. பிராந்திய அமைதி, பாதுகாப்பு, ஸ்திரத்தன்மை ஆகியவற்றை ஊக்குவிக்க தங்களின் அா்ப்பணிப்பையும் அவை பகிா்ந்துகொண்டன.

கலாசார ரீதியாக இரு தரப்பினரும் பரஸ்பரம் புரிந்துகொள்ளவும், நட்பு பாராட்டவும் இந்த பயிற்சி உதவுகிறது என்று அவா் கூறினாா்.

இந்தியா - மங்கோலியா இடையேயான 17-ஆவது கூட்டு ராணுவப் பயிற்சி, மங்கோலியாவின் உலான்பாதா் நகரில் உள்ள சிறப்புப் படைகள் பயிற்சி மையத்தில் கடந்த மே 31-ஆம் தேதி தொடங்கி, வரும் 13-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இதில் இரு நாடுகளில் இருந்தும் தலா 45 வீரா்கள் பங்கேற்றுள்ளனா். கடந்த ஆண்டு ஜூலையில் இதுபோன்ற பயிற்சி முகாம் மேகாலயத்தில் நடைபெற்றது. இந்தியா - மங்கோலியா இடையேயான பாதுகாப்பு ஒத்துழைப்பை பிரதிபலிக்கும் வகையில் இந்தப் பயிற்சி முகாம்கள் உள்ளன.