பிரதமராக ஓராண்டு நிறைவு! பெண்களுக்கான ஆட்சியாக மோடி பெருமிதம்!

பிரதமராக மூன்றாவது முறையாகப் பதவியேற்று, நாளை ஓராண்டு முடிவுறும் நிலையில், பிரதமர் மோடி பெருமிதம்
பிரதமராக ஓராண்டு நிறைவு! பெண்களுக்கான ஆட்சியாக மோடி பெருமிதம்!
X | Narendra Modi
Published on
Updated on
1 min read

பிரதமராக மூன்றாவது முறையாகப் பதவியேற்று, நாளை ஓராண்டு முடிவுறும் நிலையில், பாஜக ஆட்சி குறித்து பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் கூறியுள்ளார்.

பாஜக தலைமையிலான ஆட்சி குறித்து பிரதமர் மோடி கூறுகையில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் 11 ஆண்டுகால ஆட்சியில், பெண்கள் தலைமையிலான வளர்ச்சி மறுவரையறை செய்யப்பட்ட்டுள்ளது.

அறிவியல், கல்வி, விளையாட்டு, ஸ்டார்ட்அப் நிறுவனங்கள், ஆயுதப்படைகள் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் பெண்கள் சிறந்து விளங்கி, பலருக்கும் முன்னுதாரணமாக திகழ்கின்றனர்.

தூய்மை இந்தியாவிலிருந்து ஜன்தன் கணக்குகள் வரையில் பல்வேறு முயற்சிகள், பெண்களுக்கு அதிகாரமளிப்பதைத்தான் கவனமாகக் கொண்டுள்ளன.

ஏழைக் குடும்பங்களுக்கு எரிவாயு சிலிண்டர்கள் மூலம் புகையில்லாத சமையலறை, லட்சக்கணக்கான பெண் தொழில்முனைவோருக்கு முத்ரா கடன்கள் மூலம் அவர்களின் கனவுகளை அடைய முடிந்தது.

பிரதமரின் வீட்டுவசதித் திட்டத்தில் பெண்களின் பெயரில் வீடுகளும் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தின. மகளைக் காப்பாற்றுங்கள், மகளுக்கு கல்வி கற்பியுங்கள் (Beti Bachao Beti Padhao) என்ற அறிவுறுத்தலின் திட்டம், பெண் குழந்தைகளைப் பாதுகாப்பதற்கான ஒரு தேசிய இயக்கத்தைத் தூண்டிவிட்டது என்று தெரிவித்தார்.

இதையும் படிக்க: சொல்லப் போனால்... திட்டமிடப்படாத நெரிசல் கொலைகள்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Open in App
Dinamani
www.dinamani.com