தில்லி பேருந்து முன்பு ஸ்டன்ட்! பைக்கை பழைய இரும்புச் சாமான் கடைக்கு அனுப்பிய போலீஸ்

தில்லி பேருந்து முன்பு ஜிக்-ஜாக் போட்ட இளைஞரின் பைக்கை பழைய இரும்புச் சாமான் கடைக்கு அனுப்பியது போலீஸ்
delhi bus stunt
தில்லி இளைஞர்விடியோவிலிருந்து
Published on
Updated on
1 min read

தில்லியில் மாநகரப் பேருந்து முன்பு, வளைந்து வளைந்து ஓட்டிக்கொண்டே, பேருந்தை இயக்கவிடாமல் தொல்லை தந்து, இளைஞர் செய்த சம்பவம் சமூக வலைத்தளத்தில் வைரலான நிலையில், அவரது ராயல் என்ஃபீல்டு பைக்கை, பழைய இரும்புச் சாமான் கடைக்கு அனுப்பியிருக்கிறது காவல்துறை.

கிழக்கு தில்லியின் யமுனா விஹாரிலிருந்து புறப்பட்ட 253 எண் கொண்ட தில்லி மாநகரப் பேருந்து முன்பு, ஸ்டண்ட் செய்த இளைஞரின் விடியோ ஒன்று அண்மையில் வைரலாகியிருந்தது.

அதில், ஹெல்மெட் அணியாத இளைஞர் ஒருவர், சாலையில் பேருந்துக்கு மிக அருகே, வளைந்து வளைந்து தனது ராயல் என்ஃபீல்டு பைக்கை ஓட்டிக்கொண்டு வந்ததும், பேருந்தால் வேகமாக இயக்க முடியாமல் ஓட்டுநர் அவதியடைந்ததும் அந்த விடியோவில் பதிவாகியிருந்தது.

பிறகு, பேருந்துக்கு வழிவிடுவது போல அதன் பக்கவாட்டில் சென்ற இளைஞர், ஓட்டுநர்இருக்கைக்கு அருகே பேருந்தைப் பிடித்தபடி ஒன்றாக பைக்கை ஓட்டி வந்தார். இதனால், ஓட்டுநர், எங்கே விபத்து நேரிட்டுவிடுமோ என்ற அச்ச உணர்விலேயே வாகனத்தை இயக்கியிருப்பார் என்பது விடியோவைப் பார்க்கும் யாருக்கும் தெரியும்.

இந்த நிலையில், இந்த விடியோவைப் பார்த்த தில்லி காவல்துறையினர், உடனடியாக இளைஞரைத் தேடும் பணியில் ஈடுபட்டனர்.

இதையும் படிக்க: சொல்லப் போனால்... திட்டமிடப்படாத நெரிசல் கொலைகள்!

உடனடியாக பைக் எண்ணைக் கொண்டு அதன் உரிமையாளர் விவரம் கண்டறியப்பட்டது. அவர் 13 ஆண்டுகளுக்கு முன்பே, அந்த வாகனத்தை விற்றிருப்பதும், பெயர் மாற்றப்படாமல் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்ட்து.

அந்த பைக் 15 ஆண்டுகள் பழமையான வாகனம் என்பது கண்டுபிடிக்கப்பட்டு, உடனடியாக அந்த வாகனத்தை வைத்திருக்கும் இளைஞரின் விவரமும் கண்டுபிடிக்கப்பட்டு, வாகனத்தை பழைய இரும்புச் சாமான் கடைக்கு அனுப்பியிருக்கிறது காவல்துறை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com