12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்லேகர் ஒப்புதல்!காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

வெளிநாடுகளுக்குச் சென்றுவந்த எம்.பி.க்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு: ஓவைசி பங்கேற்கவில்லை!

எம்.பி.க்களுடன் சந்திப்பு: பிரதமர் மோடியைச் சந்திப்பதை தவிர்த்த ஓவைசி!

ஓவைசி

Published On :

புது தில்லி: ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவரும் எம்.பி.யுமான அசாதுதீன் ஓவைசி இன்று(ஜூன் 10) பிரதமர் மோடியை சந்திப்பதை தவிர்த்துவிட்டார்.

எல்லை தாண்டிய பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு பாகிஸ்தான் ஆதரவு அளித்துவருவதை அம்பலப்படுத்தி, பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் கொள்கையை விளக்கும் நோக்கில், எம்.பிக்கள் குழுக்கள் 33 நாடுகளுக்குச் சென்றன. அங்கு அந்த நாட்டு மூத்த அரசியல் பிரமுகர்களைச் சந்தித்து, பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாடு, பஹல்காம் தாக்குதலைத் தொடா்ந்து பாகிஸ்தானில் பயங்கரவாத உள்கட்டமைப்புகளைக் குறிவைத்து இந்தியா மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் குறித்து விளக்கி இந்தியாவுக்கு ஆதரவு பெற்று வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தியா சார்பில் வெளிநாடுகளுக்குச் சென்று வந்துள்ள அனைத்துக்கட்சி எம்.பி.க்கள் குழுக்களை பிரதமர் மோடி இன்று சந்தித்து பேசினார்.

இந்த நிலையில், எம்.பி.க்கள் குழுக்களில் இடம்பெற்றிருந்த ஓவைசி பிரதமர் மோடியை சந்திப்பதை தவிர்த்துவிட்டார். தாம் துபைக்கு நெருங்கிய உறவினரின் மருத்துவ சிகிச்சைக்காகச் சென்றிருந்ததால் இந்த கூட்டத்தில் கலந்துகொள்விலை என்று அவர் விளக்கமளித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.