கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மணிப்பூரில் தொடரும் வன்முறை: 2 போலீஸார் காயம்!

மணிப்பூரில் போராட்டம் தீவிரம்: போலீசாருக்கு காயம்

News image
வன்முறை களத்தில் காவல் துறையினர்..
Updated On :10 ஜூன் 2025, 6:42 am

DIN

மணிப்புரில் மைதேயி இனத்தின் அமைப்பான அரம்பாய் தெங்கோலைச் சேர்ந்த தலைவர் கனன் சிங் மற்றும் நால்வரை நிபந்தனையின்றி விடுவிக்கக் கோரி தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகின்றது. இதில் 2 காவலர் காயமடைந்தனர்.

அரம்பாய் தெங்கோலைச் சேர்ந்த தலைவர்களின் ஒருவரான கனன் சிங்கை இம்பால் விமான நிலையத்தில் இருந்து ஞாயிற்றுக்கிழமை கைது செய்ததாக சிபிஐ அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து இம்பால் பள்ளத்தாக்கின் பல மாவட்டங்களில் தடை உத்தரவுகளை மீறி போராட்டக்காரர்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் மோதல்போக்கு ஏற்பட்டுள்ளது.

திங்கள்கிழமை இரவு இம்பால் கிழக்கு மாவட்டத்தின் குராய் லாம்லாம் பகுதியில் மோதல்கள் வெடித்தன. கூட்டத்தைக் கலைக்கப் பாதுகாப்புப் படையினர் பல முறை கண்ணீர்ப் புகை குண்டுகள் மற்றும் ரப்பர் தோட்டாக்களால் சுட்டனர்.

மேலும் போராட்டக்காரர்கள் நான்கு சக்கர வாகனம் ஒன்றும் எரிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. தௌபல், காக்சிங் மாவட்டங்களிலும் சாலைத் தடுப்புகள் மற்றும் டயர்களை எரித்து போராட்டங்கள் நடைபெற்றன.

திங்கள்கிழமை மாலை இம்பால் மேற்கு மாவட்டத்தின் தேரா பகுதியிலும் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் பாதுகாப்புப் படையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் பதற்றம் ஏற்பட்டது.

விஷ்ணுபூர் மாவட்டத்தின் நம்போலில், போராட்டக்காரர்களுடனான மோதலின்போது குறைந்தது இரண்டு காவல்துறையினருக்கு காயங்கள் ஏற்பட்டன.

பதற்றத்திற்கு மத்தியில், இன்று காலை இம்பாலில் கடைகள் திறக்கப்பட்ட நிலையில், மக்கள் அத்தியாவசியப் பொருள்களை வாங்கி வருகின்றனர்.

மணிப்பூரில் 2023, மே மாதம் மைதேயி-குகி சமூகங்களிடையே மோதல் நீடித்து வருகிறது. இதில் 260-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். வன்முறை தொடங்கியபோது பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டி கனன் சிங்கை சிபிஐ கைது செய்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.