ஒவ்வொரு உயிரும் முக்கியம்! காங்கிரஸ் தொண்டர்களுக்கு ராகுல் அறிவுறுத்தல்!

ஆமதாபாத் விமான விபத்து குறித்து ராகுல் காந்தி பதிவு...
ராகுல் காந்தி
ராகுல் காந்திகோப்புப் படம்
Published on
Updated on
1 min read

ஆமதாபாத் விமான விபத்து மீட்புப் பணிகளில் அரசுடன் இணைந்து உதவிகளை மேற்கொள்ள காங்கிரஸ் தொண்டர்களுக்கு அக்கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி அறிவுறுத்தியுள்ளார்.

குஜராத் மாநிலம், ஆமதாபாத் விமான நிலையத்தில் இருந்து இன்று பிற்பகல் லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா பயணிகள் விமானம், சிறிது நேரத்தில் கீழே விழுந்து நொறுங்கியது.

அப்பகுதில் இருந்த மருத்துவக் கல்லூரியின் விடுதியின் மீது மோதியதில், மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த மாணவர்கள் பலரும் விபத்தில் சிக்கினர்.

விமானம் தீப்பிடித்து எரிந்து வரும் நிலையில், 242 பயணிகள், விமான ஊழியர்கள், மருத்துவக் கல்லூரி மாணவர்களை மீட்கும் பணியில் மீட்புப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், விமான விபத்து குறித்து எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பதிவிட்டதாவது”

”ஆமதாபாத் ஏர் இந்தியா விபத்து இதயத்தை நொறுக்கியுள்ளது.

பயணிகள் மற்றும் விமான ஊழியர்களின் குடும்பத்தினர் உணரும் வலி மற்றும் பதட்டம் கற்பனை செய்ய முடியாதது. இந்த கடினமான தருணத்தில் எனது எண்ணங்கள் அவர்கள் ஒவ்வொருவருடனும் உள்ளன.

அரசு நிர்வாகத்தின் அவசரகால மீட்பு மற்றும் நிவாரண முயற்சிகள் மிக முக்கியமானவை. ஒவ்வொரு உயிரும் முக்கியம், ஒவ்வொரு நொடியும் முக்கியம்.

காங்கிரஸ் தொண்டர்கள் களத்தில் உதவ தங்களால் முடிந்த அனைத்தையும் செய்ய வேண்டும்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com