27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

பஞ்சாபில் விமானப் படை ஹெலிகாப்டர் அவசர தரையிறக்கம்!

பஞ்சாபில் இந்திய விமானப் படையின் ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :13 ஜூன் 2025, 7:00 pm IST

பஞ்சாபின் பதான்கோட் மாவட்டத்தில், இந்திய விமானப் படைக்குச் சொந்தமான அபாச்சி ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.

பதான்கோட் விமானப்படை தளத்திலிருந்து இன்று (ஜூன் 13) புறப்பட்ட அபாச்சி ரக ஹெலிகாப்டர், வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டிருந்தது. அப்போது, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நடுவழியில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவத்துக்கான, காரணம் குறித்து எந்தவொரு தகவலும் இதுவரை வெளியிடப்படாத நிலையில், ஹெலிகாப்டரை இயக்கிய விமானி மற்றும் துணை விமானி இருவரது உயிருக்கும் எந்தவொரு ஆபத்துமில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, வெளியான விடியோ மற்றும் புகைப்படங்களில், விமானப் படையின் ஹெலிகாப்டர் திறந்தவெளியில் தரையிறக்கப்பட்டிருப்பது பதிவாகியுள்ளது.

இதன் பின்னர், மீண்டும் அந்த ஹெலிகாப்டரின் விமானிகள் அதனைப் பறக்க வைத்து பதான்கோட் விமானப் படையின் தளத்துக்குக் கொண்டுச் சென்றதாகக் கூறப்படுகிறது.

முன்னதாக, கடந்த வாரம் இந்திய விமானப் படைக்குச் சொந்தமான மற்றொரு அபாச்சி ரக ஹெலிகாப்டர், உத்தரப் பிரதேசத்தின் சஹாரன்ப்பூரில் பயிற்சியில் ஈடுபட்டபோது அவசரமாக தரையிறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.