கேரளத்தில் அடுத்த 5 நாள்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
பருவமழை தொடங்கியுள்ள நிலையில், வடக்கு கர்நாடக கடல்பகுதியில் நிலவும் சுழற்சியினால், வரும் ஜூன் 14 முதல் 17 ஆம் தேதி வரையில் கேரளத்தின் பல்வேறு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில், கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், கேரளம் - கர்நாடகம் - லட்சத்தீவு பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, இன்று (ஜூன் 13) கேரளத்தின் 10 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கையும், 4 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளன.
தொடர்ந்து, கனமழை அதிகரிக்கக் கூடும் என்பதால், வரும் ஜூன் 14 ஆம் தேதி, 2 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கையும், 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் மற்றும் 2 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் எச்சரிக்கைகளும் விடுக்கப்பட்டுள்ளன.
முன்னதாக, கேரளத்தில் பருவமழை முன்கூட்டியே கடந்த மே 24 ஆம் தேதியன்று தொடங்கியது. இதனால், அம்மாநிலத்தின் பல்வேறு இடங்களில் தொடர்ந்து மழை பெய்து உள்ளூர்வாசிகளின் இயல்பு வாழ்க்கையை மிகவும் பாதித்துள்ளது.
இதையும் படிக்க: கோவாவில் தொடரும் கனமழை! 3 நாள்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருநெல்வேலி, தேனி, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை

22 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கை!

தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழைக்கான ‘மஞ்சள்’ எச்சரிக்கை!

கேரளத்தில் கனமழை! 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்!
விடியோக்கள்

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK



