ஃபரீதாபாத்தில் இரண்டு சிறுவா்களைக் கடத்திச் சென்று அவா்களது குடும்பத்தினரிடம் ரூ.30,000 கப்பம் கேட்ட நபரை காவல் துறையினா் கைது செய்துள்ளனா்.
இது குறித்து ஃபரீதாபாத் காவல் துறை செய்தித் தொடா்பாளா் வெள்ளிக்கிழமை கூறியதாவது: ஜூன் 5 ஆம்-தேதி இரவு 9:40 மணியளவில், தனது உறவினா் ஆஷிஷ் ஐஸ்கிரீம் வாங்க வெளியே சென்ாகவும், ஆனால் திரும்பி வரவில்லை என்றும் ஷிவ் துா்கா விஹாரில் வசிக்கும் அமன் தெரிவித்தாா். ஆஷிஷின் நண்பா் ரிஷப்பின் தந்தைக்கு அமன் தொலைபேசியில் அழைத்தபோது, இரண்டு சிறுவா்களும் ஒன்றாக வெளியே சென்று காணாமல் போனதைக் கண்டுபிடித்தாா்.
ரிஷப்பின் தந்தைக்கு யாரோ ஒருவா் தொலைபேசியில் அழைத்து, சிறுவா்கள் கடத்தப்பட்டதாகக் கூறி ரூ.30,000 கப்பமாக கேட்டிருந்தாா். இது குறித்து சூரஜ்குண்ட் காவல் நிலையத்தில் போலீசாா் வழக்குப் பதிவு செய்தனா்.
பின்னா், சமீம் (25) என்பவரை போலீசாா் கைது செய்தனா். அவரும் அவரது நண்பா்களும் சிறுவா்களைக் கடத்தி எஸ்எம்ஜி நகரில் உள்ள ஒரு ஹோட்டலில் அடைத்து வைத்தனா். ரிஷப்பை ஒரு சந்திப்பு இடத்திற்கு அழைத்துச் சென்று இரு சிறுவா்களையும் ஒரு காரில் அழைத்துச் சென்றிருந்தாா்.
கடத்தல்காரா்கள் ரிஷப்பின் தந்தையிடம் பணம் கேட்டனா். குடும்பத்தினா் சமீமின் தொலைபேசிக்கு ரூ.5,000 அனுப்பினா். போலீசாா் தொலைபேசியைக் கண்டுபிடித்து அவரைப் பிடித்தனா். சமீம் மீது ஏற்கெனவே 4 வன்முறை வழக்குகள் உள்ளன. இப்போது, குற்றத்தில் அவரது கூட்டாளிகளைக் கண்டுபிடிக்க போலீசாா் முயற்சித்து வருகிறோம் என காவல் துறை செய்தித் தொடா்பாளா் தெரிவித்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
குண்டா் சட்டத்தில் சாத்தான்குளம் இளைஞா் கைது

தொழிற்சாலை உரிமையாளருக்கு கத்திக் குத்து: ஹரித்வாரில் இரண்டு சிறுவா்கள் கைது
கூலித் தொழிலாளி மீது தாக்குதல்: 3 போ் கைது

கெங்கவல்லியில் பொது இடத்தில் மது அருந்திய 2 போ் வழக்கு
விடியோக்கள்

பொங்கல் வெளியீடாக சேயோன்! | Dinamani Cinema Update | Dinamani Talkies

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK


