பஹல்காம் தாக்குதல்! உயிர்நீத்த குதிரை சவாரி தொழிலாளியின் மனைவிக்கு அரசு வேலை!

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் துணிச்சலாகப் போராடி, உயிர்நீத்த தொழிலாளிக்கு அரசின் நன்றிக் கடனாக அரசு வேலை
ஆதில் ஷாவின் குடும்பத்தினருடன் லெப்டினன்ட் கவர்னர்
ஆதில் ஷாவின் குடும்பத்தினருடன் லெப்டினன்ட் கவர்னர்X | Office of LG J&K
Published on
Updated on
1 min read

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் துணிச்சலாகப் போராடிய குதிரை சவாரி தொழிலாளி ஆதில் ஷாவின் மனைவிக்கு அரசு வேலை வழங்கப்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட குதிரை சவாரி தொழிலாளி ஆதில் ஷாவின் மனைவிக்கு அரசு வேலை வழங்கப்பட்டுள்ளது.

ஆதில் ஷாவின் துணிச்சலைப் பாராட்டி, அவரது மனைவி குல்னாஸ் அக்தருக்கு மீன்வளத் துறையில் நிரந்தர வேலை அளித்து, நியமனக் கடிதத்தை லெப்டினன்ட் கவர்னர் மனோஜ் சின்ஹா வழங்கினார்.

மேலும், அனந்த்நாக்கில் மீண்டும் வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தித் தரப்படும் என்று லெப்டினன்ட் கவர்னர் கூறினார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காம் பகுதியில் பாகிஸ்தானின் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பலியாகினர். அவர்களில் 25 பேர் சுற்றுலாப் பயணிகளும், உள்ளூர்வாசி ஒருவரும் அடங்குவர்.

பஹல்காமில் திடீரென பயங்கரவாதிகள் நுழைந்து, சுற்றுலாப் பயணிகள் மீது தாக்குதல் நடத்தினர். அந்த சமயத்தில், தனது சுற்றுலாப் பயணிகளைக் காப்பதற்காக குதிரை சவாரி தொழிலாளியான ஆதில் ஷா, பயங்கரவாதிகளின் துப்பாக்கியைப் பறிக்க முயன்றார். ஆனால், ஆதில் ஷாவை பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றனர்.

இதையும் படிக்க: குஜராத் விமான விபத்து விசாரணைக்கு 3 மாத கால அவகாசம்! மத்திய அமைச்சர் உறுதி!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com