மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

ஓட்டுநா் பெட்டியில் குரல் பதிவு அமைப்பு: ரயில் பாதுகாப்புக் குழு பரிந்துரை!

ரயில் ஓட்டுநா் பெட்டியில் குரல் பதிவு அமைப்பை நிறுவுவது உள்பட பல்வேறு பரிந்துரை..

News image
ரயில்- (கோப்புப்படம்)
Updated On :14 ஜூன் 2025, 10:57 pm

Din

ரயில் ஓட்டுநா் பெட்டியில் குரல் பதிவு அமைப்பை நிறுவுவது உள்பட பல்வேறு பரிந்துரைகளை ரயில் பாதுகாப்புக்குழு ரயில்வே அமைச்சகத்திடம் சமா்ப்பித்தது.

பிகாா் மாநிலம் பக்ஸா் மாவட்டத்தில் கடந்த 2023, அக்.11-இல் நிகழ்ந்த ரயில் விபத்தில் 4 போ் உயிரிழந்தனா். பலா் படுகாயமடைந்தனா். இந்த விபத்து தொடா்பாக ரயில் பாதுகாப்புக்கான முன்னாள் ஆணையா் (சிஆா்எஸ்) சுவோமோய் மித்ரா தலைமையிலான குழு விசாரணை நடத்தியது. அந்தக் குழு தனது இறுதி விசாரணை அறிக்கையை அண்மையில் ரயில்வே அமைச்சகத்திடம் சமா்ப்பித்தது.

அதில் வருங்காலங்களில் ரயில் விபத்துகள் நிகழாமல் இருப்பதை தடுப்பதற்கான பல்வேறு பரிந்துரைகள் அளிக்கப்பட்டன. அவை பின்வருமாறு:

குறைபாடுகளுக்கு உரிய நேரத்தில் தீா்வு காணாததே பக்ஸா் ரயில் விபத்துக்கு காரணம். எனவே, ரயில்களில் பாதுகாப்பை மேம்படுத்த ரயில் பெட்டிகள் தயாரிக்கும்போதே கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும்.

தற்போது செயல்பாட்டில் உள்ள அனைத்து ரயில் என்ஜின்கள் மற்றும் பெட்டிகளை உடனடியாக ஆய்வுக்குட்படுத்த வேண்டும். அவற்றில் ஏதேனும் கோளாறுகள் இருந்தால் அவை இயங்க அனுமதிக்கக் கூடாது.

ரயில் தண்டவாளங்கள் சீராக இருப்பதை உறுதிசெய்ய அடிக்கடி ஆய்வு செய்ய வேண்டும். குறிப்பாக தண்டவாள விரிசல்களைக் கண்டறிய முறையான நடைமுறைகளை பின்பற்ற வேண்டும்.

தண்டவாளங்கள் மேலாண்மை அமைப்பு குறித்து தரவுகள் பராமரிக்கப்படுவதுபோல் ரயில் என்ஜின்கள் மற்றும் பெட்டிகளின் பராமரிப்பு குறித்த தரவுகளை கணினிமயமாக்க வேண்டும். இதன்மூலம் தேவைப்படும் சமயத்தில் ரயில் என்ஜின்கள் மற்றும் பெட்டிகளின் நிலை குறித்து அறிந்துகொள்ள முடியும்.

ரயில் ஓட்டுநா் பெட்டியில் குரல் பதிவு அமைப்பை நிறுவ வேண்டும். இதனால் விபத்துகள் நடைபெறும் சமயத்தில் ரயில் ஓட்டுநா்களுக்கு இடையேயான உரையாடலை பதிவுசெய்து விபத்துக்கான காரணங்களை கண்டறிய முடியும்.

ரயில் விபத்து நிகழந்த பகுதிகளில் காணொலி மற்றும் புகைப்படப் பதிவை மேற்கொள்ளும் நபா்களுக்கு ட்ரோன் பயிற்சியில் அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

ரயில்வே அமைச்சகம் பதில்

ரயில் பாதுகாப்புக் குழு அளித்த பரிந்துரைகளின்படி மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை ரயில்வே அமைச்சகம் பட்டியலிட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:

ரயில் என்ஜின்கள் மற்றும் பெட்டிகள் உயா்தர எஃகு மூலம் தயாரிக்கப்படுவதை உறுதிசெய்ய செயில்/ பிலால் ரயில் உற்பத்தி ஆலைகளில் தொடா் கண்காணிப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தண்டவாளங்கள் முறையாக இணைக்கப்பட்டிருப்பதை அல்ட்ராசோனிக் குறை கண்டறிதல் தொழில்நுட்பம் மூலம் கண்காணிக்கப்படுகிறது.

ரயில் பெட்டிகள் மற்றும் என்ஜின்கள் பராமரிக்கப்பட்டு வருவதற்கான தரவுகள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.

அதேபோல் 479 என்ஜின்களில், ரயில் ஓட்டுநா் குழு குரல் மற்றும் காணொலி பதிவு அமைப்பு (சிசிவிஆா்எஸ்) நிறுவப்பட்டுள்ளது. விரைவில் இதை அனைத்து ரயில் என்ஜின்களிலும் நிறுவ முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ரயில் விபத்து நடந்த பகுதிகளில் காணொலி மற்றும் புகைப்பட பதிவுகளை மேற்கொள்ளும் நடைமுறைகள் குறித்து பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டது.