
சாதிவாரி கணக்கெடுப்புடன்கூடிய மக்கள்தொகை கணக்கெடுப்பை இரண்டு கட்டங்களாக நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
மத்திய அரசின் திட்டப்படி, ஹிமாசல பிரதேசம், உத்தரகண்ட் மாநிலங்கள், லடாக் யூனியன் பிரதேசம் மற்றும் ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்தில் 2026 அக்டோபா் 1-ஐ வரம்பு தேதியாகக் கொண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும். நாட்டின் பிற பகுதிகளில் 2027-ஆம் ஆண்டு மாா்ச் 1-ஐ வரம்பு தேதியாக கொண்டு இரண்டாம் கட்ட கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று திட்டமிடப்பட்டு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
இந்த நிலையில், மக்கள்தொகை கணக்கெடுப்பு பணிகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஞாயிற்றுக்கிழமை(ஜூன் 15) ஆலோசனை நடத்தியுள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்தில் உள்துறைச் செயலர் மற்றும் மூத்த அதிகாரிகள் உடனிருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.