

உத்தரப் பிரதேசத்தில் பாம்புக்கு முத்தமிட்டு விளையாடிய நபரை அந்த பாம்பு கடித்ததில் அவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
உத்தரப் பிரதேச மாநிலம், அம்ரோஹாவைச் சேர்ந்த விவசாயி ஜிதேந்திர குமார். அப்பகுதியில் வெள்ளிக்கிழமை மாலை சுவரில் பாம்பு ஒன்று இருந்திருக்கிறது. இதனைக் கண்ட மக்கள் பீதியடைந்தனர். அப்போது சம்பவ இடத்திற்கு வந்த ஜிதேந்திர குமார் பாம்பைப் பிடித்து அவரது கழுத்தில் போட்டுக்கொண்டார்.
அந்த நேரத்தில் அவர் குடிபோதையில் இருந்தாகவும் கூறப்படுகிறது. தொடர்ந்து அதனுடன் அவர் விளையாடினார். பின்னர் பீடியை இழுத்தவாறே பாம்பை தனது வாய் அருகே கொண்டு சென்று முத்தமிட்டார். பிடி தளர்ந்தவுடன், பாம்பு அவரது நாக்கில் கடித்தது. பாம்பு கடித்த சிறிது நேரத்திலேயே, ஜிதேந்திர குமாரின் உடல்நிலை மோசமடையத் தொடங்கியது.
உடனே அவர் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக கிராமத் தலைவர் ஜெய்கிராத் சிங் தெரிவித்தார். பாம்பைப் பிடிக்கும் ஜிதேந்திர குமார் அடிக்கடி இவ்வாறு வித்தை காட்டி வந்துள்ளார்.
ஆனால் இந்த முறை அவரது விளையாட்டு வினையில் சென்று முடிந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.