இது போருக்கான சகாப்தம் அல்ல: மோடி

உலகில் நிலவும் போர்ச் சூழல் குறித்து பிரதமர் மோடி பேச்சு...
modi in cyprus
பிரதமர் நரேந்திர மோடி PTI
Published on
Updated on
1 min read

இது போருக்கான சகாப்தம் அல்ல என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

மூன்று நாடுகளுக்கான 5 நாள்கள் அரசுமுறைப் பயணத்தின் முதல் கட்டமாக, மத்தியதரைக் கடலில் அமைந்துள்ள தீவு நாடான சைப்ரஸுக்கு பிரதமா் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை சென்றார்.

இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது தொடா்பாக, தலைநகா் நிகோசியாவில் சைப்ரஸ் அதிபா் நிகோஸ் கிறிஸ்டோடெளலிடிஸ் மற்றும் பிரதமர் மோடி இன்று பேச்சுவார்த்தை நடத்தினர்.

தொடரும் இருநாட்டுத் தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்கள் மத்தியில் பேசினர்.

அப்போது மோடி பேசியதாவது:

“எனக்கு வழங்கப்பட்ட மரியாதை எனது நாட்டுக்கு வழங்கப்பட்டதாக கருதுகிறேன். சைப்ரஸ் மற்றும் இந்தியாவுக்கு இடையே பிரிக்க முடியாத நட்பின் முத்திரையாக பார்க்கின்றேன்.

இரண்டு தசாப்தங்கள் இடைவெளிக்கு பிறகு சைப்ரஸுக்கு இந்திய பிரதமர் வருகை தந்திருப்பது, இரு நாட்டு உறவின் புதிய அத்தியாத்தை உருவாக்குவதற்கான வாய்ப்பாகும்.

எல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் போராட்டத்துக்கும், பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவை நிரந்தர உறுப்பினராக இணைக்கவும் ஆதரவு அளிக்கும் சைப்ரஸுக்கு நன்றி.

பயங்கரவாதம், போதைப்பொருள் மற்றும் ஆயுதக் கடத்தைத் தடுக்க இரு நாட்டு விசாரணை அமைப்பு இடையே உடனடி தகவல் பரிமாற்றத்துக்கான வழிமுறை உருவாக்கப்படும்.

இந்தியா - சைப்ரஸ் - கிரீஸ் நாடுகளின் கூட்டமைப்பு தொடங்கப்பட்டுள்ளது. இந்தியா - மத்திய கிழக்கு - ஐரோப்பியா பொருளாதார வழித்தடம், அமைதி மற்றும் செழிப்புக்கு வழிவகுக்கும்.

மேற்கு ஆசியா மற்றும் ஐரோப்பியாவில் நடந்து வரும் மோதல்கள் கவலை அளிக்கிறது. இது போரின் சகாப்தம் அல்ல என்று நம்புகிறோம்” எனத் தெரிவித்தார்.

சைப்ரஸில் தனது பயணத்தை இன்று முடித்துவிட்டு புறப்படும் மோடி, கனடாவில் நடைபெறும் ஜி7 உச்சிமாநாட்டில் நாளை பங்கேற்று பேசுகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com