
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மூன்று நாள் அரசுமுறை பயணமாக டேராடூனுக்குச் செல்கிறார்.
இந்த பயணத்திற்கான ஏற்பாடுகள் அரசு மேற்கொண்டு வருகின்றன. மேலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக உத்தரகண்ட் முதல்வர் அலுவலகம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவித்துள்ளது.
டேராடூனில் உள்ள ராஜ்பூர் சாலையில் 132 ஏக்கர் நிலத்தில் உருவாக்கப்படும் அதிநவீன பொது பூங்காவிற்கு குடியரசுத்தலைவர் முர்மு அடிக்கல் நாட்டுவார். இந்த பூங்கா ஒரு வருடத்தில் கட்டி முடிக்கப்பட்டு பொதுமக்களுக்கு அர்ப்பணிக்கப்படும் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும் 24 ஏக்கர் பரப்பளவில் அமைந்து ராஷ்டிரபதி நிகேதன் ஜூன் 24ல் பொதுமக்களுக்கு திறக்கப்படும். ராஷ்டிரபதி நிகேதன் முன்பு ராஷ்டிரபதி ஆஷியானா என்று அழைக்கப்பட்டது. இங்கு பாரம்பரிய கட்டடத்தில் கலைப்பொருள்களின் சேகரிப்பு, பார்வையாளர்களைக் கவரும் வகையில் லில்லி தலாப், ரோகாரி தலாப், ரோஜா தோட்டம் போன்றவற்றைக் காணலாம்.
மேலும், 19 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள ராஷ்டிரபதி தபோவன், பொதுமக்களுக்கு அர்ப்பணிக்கப்படும். முன்னதாக, ஜூன் 18, 19 மத்தியப் பிரதேசத்திற்கு முர்முவின் வருகை ரத்து செய்யப்பட்டுள்ளதாக இந்தூர் ஆணையர் தகவல் தெரிவிக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.