வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது!தங்கம் விலை தொடர்ந்து 5-ஆவது நாளாக சரிவு!அடுத்த 2 மணிநேரத்துக்கு சென்னை உள்பட 24 மாவட்டங்களில் மழை!திருவண்ணாமலையில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறைவிழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறைவிலங்குகளிலிருந்து பரவும் ‘ஷமோண்டா’ தீநுண்மி: பிரான்ஸில் முதல் மனித பாதிப்புவார இறுதி, முகூா்த்த தினம்: 2,725 சிறப்பு பேருந்துகள் இயக்கம்சென்னையில் ஆவின் பால் விநியோகத்தில் பாதிப்பில்லை: ஆவின் நிா்வாகம்தலைமைத் தோ்தல் ஆணையருக்கு எதிரான எந்தவொரு பதவிநீக்க தீா்மானமும் விதிகளின்படி பரிசீலிக்கப்படும்: ஓம் பிா்லாஇன்று சென்னைக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கைசுதந்திர நாளில் தீபமேற்ற பிரதமர் மோடிக்கு இஸ்ரேல் அழைப்பு!நாம் தமிழர் வேட்பாளர் கார்த்திகா உள்பட 9 பேருக்கு ஜாமீன்!சமூகநீதித் துறை விடுதிகளில் மாணவர்களின் உணவுக் கட்டணம் உயர்வு!பேட்மிண்டனில் வெண்கலம் வென்ற மனிஷாவுக்கு ரூ. 30 லட்சம் ஊக்கத்தொகை!

ஒடிசாவில் தொடரும் காலரா! பள்ளிகள் திறப்பு ஒத்திவைப்பு!

ஒடிசாவில் காலரா பாதிப்புகள் அதிகரித்து வருவதைப் பற்றி...

கோப்புப் படம்

Updated On :

ஒடிசாவில் காலரா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரிப்பதால், 2 மாவட்டங்களின் பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்களின் திறப்பை ஒத்திவைக்க அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

கோடைக்கால விடுமுறைகள் முடிந்து ஒடிசாவிலுள்ள பள்ளிகள் அனைத்தும் வரும் ஜூன் 20 ஆம் தேதியன்று திறக்கத் திட்டமிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், அங்கு காலரா பாதிப்புகள் அதிகரித்து வருவதால், ஜாஜ்பூர் மற்றும் பத்ராக் ஆகிய மாவட்டங்களிலுள்ள பள்ளிகளின் திறப்பு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில், பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்களின் விடுமுறையானது ஜாஜ்பூரில் ஜூன் 24 ஆம் தேதி வரையும், பத்ராக்கில் ஜூன் 21 ஆம் தேதி வரையும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, ஒடிசாவின் பள்ளி கல்வித்துறை அமைச்சர் நித்யாந்தா கோந்த் கூறியதாவது:

“காலரா பாதித்த ஜாஜ்பூர், கட்டாக் மற்றும் பத்ராக் மாவட்டங்களிலுள்ள பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுவது குறித்து, அந்தந்த மாவட்டங்களின் ஆட்சியர்கள் முடிவு செய்ய அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது” எனக் கூறியுள்ளார்.

இந்நிலையில், காலரா பாதிப்புகளுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பள்ளிகளிலுள்ள குடிநீர் இயந்திரங்கள் மற்றும் மதிய உணவுத் திட்டம் ஆகியவற்றை மேம்படுத்த அம்மாநில அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

இத்துடன், காலரா பாதித்த 3 மாவட்டங்களில் மத்திய மற்றும் மாநில அரசின் நிபுணர்கள் இணைந்து ஆய்வுகள் மேற்கொண்டு வருகின்றனர்.

முன்னதாக, காலராவால் அதிகம் பாதிக்கப்பட்ட ஜாஜ்பூர் மாவட்டத்தில் தற்போது 196 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், இந்தத் தொற்றுக்கு 13 பேர் பலியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.