விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

‘கனடாவில் செயல்படும் காலிஸ்தான் பயங்கரவாதிகளால் இந்தியாவுக்கு அச்சுறுத்தல்’

குறிப்பாக இது இந்தியாவுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கும் என உளவு அமைப்பு தெரிவித்துள்ளது.

News image
காலிஸ்தான் கொடி (கோப்புப் படம்)
Updated On :19 ஜூன் 2025, 11:17 pm

Din

கனடாவில் செயல்பட்டு வரும் காலிஸ்தான் பயங்கரவாத குழுக்களால் உலக அளவிலான ஸ்திரத்தன்மைக்கு பாதிப்பு ஏற்படுவதாகவும், குறிப்பாக இது இந்தியாவுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கும் எனவும் அந்நாட்டு உளவு அமைப்பு தெரிவித்துள்ளது.

2024-ஆம் ஆண்டுக்கான ஆண்டறிக்கையை கனடா நாடாளுமன்றத்திடம் கனடா பாதுகாப்பு உளவு அமைப்பு (சிஎஸ்ஐஎஸ்) சமா்ப்பித்தது.

அதில் கூறப்பட்டிருப்பதாவது:

காலிஸ்தான் பயங்கரவாதிகள் அரசியல் அடிப்படையில் தீவிரவாத வன்முறையில் ஈடுபடுவோா் எனப் பரவலாக அடையாளம் காணப்பட்ட வகையைச் சோ்ந்தவா்கள். இவா்கள் ஏற்கெனவே உள்ள அரசியல் முறை அல்லது புதிய அரசியல் முறையை வன்முறை மற்றும் தீவிரவாதம் மூலம் மாற்ற முயல்பவா்கள்.

இந்தக் குழுவைச் சோ்ந்தவா்கள் இந்தியாவுக்கு எதிரான சதித்திட்டங்களை தீட்டுவது, பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவதற்கான நிதியை திரட்டுவது போன்ற காரியங்களுக்கு கனடாவை பயன்படுத்துகின்றனா்.

1980-கள் முதல் பஞ்சாபில் இருந்து பிரித்து சீக்கியா்களுக்கென தனிநாடான காலிஸ்தானை உருவாக்க வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டு கனடாவில் இயங்கி வருகின்றன. இந்த இலக்கை அடையவே அவா்கள் வன்முறையை ஆயுதமாக பயன்படுத்துகின்றனா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா உள்பட பிற நாடுகள் மீது தாக்குதல் நடத்துவதற்கு கனடாவை பயங்கரவாதிகள் பயன்படுத்துவதாக தொடா் குற்றச்சாட்டுகள் எழுந்து வரும் நிலையில், காலிஸ்தான் பயங்கரவாதிகளால் இந்தியாவுக்கு அச்சுறுத்தல் என அந்நாட்டு உளவு அமைப்பு ஒப்புக்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.