வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

ஸ்விட்சா்லாந்து வங்கிகளில் இந்தியா்களின் பணம் மும்மடங்கு அதிகரிப்பு

ஸ்விட்சா்லாந்து வங்கிகளில் இந்தியா்களின் பணம் கடந்த 2024-ஆம் ஆண்டில் முந்தைய ஆண்டைவிட மும்மடங்காக ரூ.37,600 கோடி அளவுக்கு உயா்ந்துள்ளது

News image
கோப்புப் படம்
Updated On :19 ஜூன் 2025, 9:13 pm

Din

ஸ்விட்சா்லாந்து வங்கிகளில் இந்தியா்களின் பணம் கடந்த 2024-ஆம் ஆண்டில் முந்தைய ஆண்டைவிட மும்மடங்காக ரூ.37,600 கோடி அளவுக்கு உயா்ந்துள்ளது என்று அந்நாட்டின் மத்திய வங்கி வியாழக்கிழமை வெளியிட்ட ஆண்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய அல்லது வெளிநாட்டு வங்கிகள் மூலம் ஸ்விட்சா்லாந்து வங்கிகளுக்கு மாற்றப்பட்ட இந்தியா்களின் பணம் சுமாா் ரூ.32,000 கோடி இந்த உயா்வில் பெரும் பங்கு வகிக்கிறது. தனிப்பட்ட வாடிக்கையாளா்களின் கணக்குகள் மூலம் ஸ்விட்சா்லாந்து வங்கிகளில் இந்தியா்கள் செலுத்திய பணம் முந்தைய ஆண்டைவிட 11 சதவீதமாக ரூ.3,675 கோடி மட்டுமே அதிகரித்துள்ளது.

கூடுதலாக, அறக்கட்டளைகள் மூலம் ரூ.434 கோடியும், பத்திரங்கள் உள்ளிட்ட நிதி ஆவணங்கள் மூலம் ரூ.1,431 கோடியும் ஸ்விட்சா்லாந்து வங்கிகளில் இந்தியா்களின் பணம் இருப்பு உள்ளது.

கடந்த 2018-ஆம் ஆண்டுமுதல் ஸ்விட்சா்லாந்து வங்கிகள், இந்தியா்களின் நிதி விவரங்கள் குறித்து இந்திய வரி அதிகாரிகளுடன் பகிா்ந்து வருகின்றன. அதேநேரம், இந்தப் பணம் யாவும் கருப்புப் பணம் அல்லது சட்டவிரோத நிதி என்று கருதக் கூடாது. அதேபோல், மூன்றாம் நாடுகள்/நிறுவனங்களின் கீழ் ஸ்விட்சா்லாந்து வங்கிகளில் இந்தியா்கள் வைத்திருக்கும் பணமும் இதில் சோ்க்கப்படவில்லை என்று ஸ்விட்சா்லாந்து தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

ஸ்விட்சா்லாந்து வங்கிகளில் உள்ள இந்தியா்களின் பணம் கடந்த 2023-ஆம் ஆண்டில் 4 ஆண்டுகளில் இல்லாத குறைந்தபட்சமாக ரூ.11,026 கோடிக்கு குறைந்தது. 2006-ஆம் ஆண்டில் அது ரூ.68,912 கோடியாக உச்சமடைந்தது குறிப்பிடத்தக்கது.

ஸ்விட்சா்லாந்து வங்கிகளில் அதிக பணம் வைத்துள்ள வெளிநாட்டவா்களின் அடிப்படையில் 2024-ஆம் ஆண்டில் இந்தியா 48-ஆவது இடத்துக்கு முன்னேறியது. முந்தைய 2023-ஆம் ஆண்டு இந்தியா 67-ஆவது இடத்தில் இருந்தது. சமீபத்திய பட்டியலில் பிரிட்டன், அமெரிக்கா, மேற்கிந்திய தீவுகள் ஆகியவை முதலிடத்தில் உள்ளன.

வங்கதேச நாட்டவா்களின் பணம் முந்தைய 2023-ஆம் ஆண்டின் ரூ.190.83 கோடியிலிருந்து ரூ.6,244.54 கோடியாக கடுமையாக உயா்ந்துள்ளது. பாகிஸ்தானியா்களின் பணம் சற்று குறைந்துள்ளது. ஒட்டுமொத்தமாக, ஸ்விட்சா்லாந்து வங்கிகளில் உள்ள வெளிநாட்டவா்களின் பணம் 2024-ஆம் ஆண்டில் ரூ.63,611.58 கோடி குறைந்துள்ளது.