மேற்கு வங்க இடைத் தேர்தலில் பாஜக வேட்பாளர் ஒருவர் தனது தனது நடுவிரலில் தேர்தல் அதிகாரிகள் வேண்டுமென்றே மை வைத்து அவமானப்படுத்திவிட்டதாக புகார் அளித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
மேற்கு வங்கம், கேரளம் உள்பட நான்கு மாநிலங்களில் 5 பேரவைத் தொகுதிகளுக்கு நடைபெறும் இடைத்தோ்தலுக்கான வாக்குப்பதிவு இன்று(ஜூன் 19) காலை தொடங்கி நடைபெற்றது.
கேரளத்தின் நிலம்பூா், குஜராத்தின் விசாவதா், காடி, மேற்கு வங்கத்தின் காலிகஞ்ச் மற்றும் பஞ்சாபின் லூதியானா (மேற்கு) தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது.
மேற்கு வங்கத்தின் காலிகஞ்ச் தொகுதியில் பாஜக சார்பில் நதியா மாவட்டத்தைச் சேர்ந்த ஆஷிஷ் கோஷ் போட்டியிட்டார். இவர் டெபக்ராமில் உள்ள 173-வது பூத்தில் தனது வாக்கினைப் பதிவு செய்தார். இவர் வாக்கு செலுத்தியபின்னர், தேர்தல் அதிகாரிகள் இவரின் நடுவிரலில் மை வைத்துள்ளனர்.
இதனால், கோபமடைந்த ஆஷிஷ் கோஷ் வேண்டுமென்றே ஆளுங்கட்சியான திரிணமூல் காங்கிரஸ் பூத் ஏஜண்டுகள் நடுவிரலில் மை வைத்து தன்னை அசிங்கப்படுத்திவிட்டதாக அதிகாரிகள் மீது குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து ஆஷிஷ் கோஷ் கூறும்போது, “முதலில் நான் வாக்களிக்கச் சென்றபோது அவர்கள் என் கையில் மை வைக்கவில்லை. வாக்களித்துவிட்டு திரும்பிச் சென்று கேட்டபின்னர் வேண்டுமென்றே அவர்கள் என்னுடைய நடுவிரலில் மை வைத்துவிட்டனர்.
இது முன்கூட்டியே திட்டமிடப்பட்டது. இது திரிணமூல் காங்கிரஸின் சதியே தவிர, வேறு எதுவுமில்லை. அவர்கள் அவமானப் படுத்தவேண்டும் என்ற நோக்கத்திலேயே இவ்வாறு செய்துள்ளனர்” என்றார்.
பாஜக வேட்பாளரின் குற்றச்சாட்டுகளால் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிக்க: ஈரான் தலைமை மதகுரு கமேனிக்கு இஸ்ரேல் வெளிப்படை எச்சரிக்கை!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மேற்கு வங்க சட்டப்பேரவையில் திரிணமூல் எம்எல்ஏ வெளியேற்றம்

மேற்கு வங்க இடைத்தேர்தல்: பாஜக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்!
போலி நகைகளை அடகு வைத்ததாக புகாா் 4 போ் மீது வழக்கு

மேற்கு வங்கத்தில் ‘சைவ திணிப்பு’: பாஜக அரசு மீது திரிணமூல் குற்றச்சாட்டு
விடியோக்கள்

அனுபவம் இல்லையா? அக்கறையில்லையா?: முதல்வரை விமர்சித்த ஆர்.பி. உதயகுமார் | ADMK | TVK



