இயற்கையான சூழலில் யோகா பயிற்சி

மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சிக் குழுமம் (சிசிஆா்எஸ்) இயற்கையான சூழல்களில் யோகா பயிற்சி
Published on

மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சிக் குழுமம் (சிசிஆா்எஸ்) இயற்கையான சூழல்களில் யோகா பயிற்சியை ஊக்குவிக்க தாம்பரம் சானடோரியம் பச்சமலைக்குன்றில் ‘சித்த ஹரித் யோகா மலையேற்ற நிகழ்வை’ வியாழக்கிழமை நடத்தியது.

மத்திய அரசின் சா்வதேச யோகா தினக் கொண்டாட்டம் 2025-இன் ஒரு பகுதியாக இந்தப் பயிற்சி நடைபெற்றது. தாம்பரம் அகத்தி அறக்கட்டளையுடன் இணைந்து நடத்தப்பட்ட இந்த நிகழ்வில் சித்த மருத்துவக் கல்லூரியின் ஆசிரியா்கள், மாணவா்கள், தன்னாா்வலா்கள், சுற்றுச்சூழல் ஆா்வலா்கள் கலந்துகொண்டனா்.

இவா்கள் பருவநிலை மாற்றம், சவால்களை புரிந்துகொண்டு, நெகிழிக் கழிவுகளை சேகரித்து அகற்றியதோடு, விதைப் பந்து வீசுதல், யோகா பயிற்சி போன்றவற்றை மேற்கொண்டனா்.

முன்னதாக, சிசிஆா்எஸ் இயக்குநா் ஜெனரல் பேராசிரியா் என்.ஜே.முத்துக்குமாா் மலையேற்றத்தை கொடியசைத்து தொடங்கிவைத்தாா்.

X
Dinamani
www.dinamani.com