
உத்தரப் பிரதேசத்தில் இரண்டு வெவ்வேறு சம்பவங்களில் மின்னல் பாய்ந்து 4 பேர் வெள்ளிக்கிழமை பலியானார்கள்.
முதல் சம்பவத்தில், சராய் அகில் பகுதியில் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்த நான்கு பேர் மீது மின்னல் பாய்ந்தது. உடனே அவர்கள் அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
ஆனால் அங்கு சதீஷ் (13) மற்றும் மணி (13) இருவரும் பலியானதாக அறிவிக்கப்பட்டது. மற்ற இருவருக்கும் முதலுதவி அளிக்கப்பட்டது.
இரண்டாவது சம்பவம், தாரா கா புரா கிராமத்தில் நடந்ததுது. எருமைகளை மேய்ச்சலுக்காக வெளியே கொண்டு சென்றபோது மின்னல் பாய்ந்து கோவிந்த் (15) சம்பவ இடத்திலேயே பலியானான்.
மேலும் மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த ரூபா தேவியும் (12) பலியானார்.
அதேசமயம் மோஹித் (10) சராய் அகிலிள் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.