16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு! கிளாம்பாக்கத்திலிருந்து இன்று மாலை முதல் கூடுதல் மாநகரப் பேருந்துகள்!செய்யறிவே எதிர்காலம்; வளர்ச்சியை மட்டுப்படுத்த முடியாது! டிரம்ப் திட்டவட்டம்!மக்கள் ஒப்புதல் இல்லாமல் பட்டினம்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்ட முடியாது! திருமாவளவன்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 360 குறைந்தது!சிதம்பரத்தில் அம்பேத்கர் சிலை சேதம்: போலீசார் குவிப்பு

கலப்புத் திருமணம் செய்த பெண்ணால் 40 பேர் மொட்டை! பரிகாரமா? மூடநம்பிக்கையா?

ஒடிஸாவில் கலப்புத் திருமணம் செய்துகொண்ட பெண்ணால், 40 பேர் மொட்டையடித்து பரிகார பூஜை

மொட்டையடித்துக் கொண்ட உறவினர்கள் - ENS

Published On :

ஒடிஸாவில் கலப்புத் திருமணம் செய்த பெண்ணின் குடும்பத்தினர் மொட்டையடித்து, பரிகார பூஜை செய்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

ஒடிஸா மாநிலத்தில் ராயகடா மாவட்டத்தில் உள்ள பைகனகுடா கிராமத்தில் பழங்குடியினத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், பட்டியலினத்தவர் ஒருவரை காதலித்துள்ளார்.

ஆனால், வேற்றினத்தவரை தங்கள் இனப் பெண் திருமணம் செய்தல் கூடாது என்று பெண்ணின் சமுதாயத்தில் வழக்கமாக உள்ளதாகத் தெரிகிறது. ஒருவேளை, வேற்றினத்தவரை திருமணம் செய்து கொண்டால், தெய்வத்தின் கோபத்துக்கு குடும்பத்தினர் ஆளாகி விடுவர் என்ற மூடநம்பிக்கையும் அவர்களை ஆட்கொண்டுள்ளது.

இருப்பினும், தனது குடும்பத்தினர், உறவினர்களின் எதிர்ப்பையும் மீறி, வேற்றினத்தவரை பழங்குடிப் பெண் கலப்புத் திருமணம் செய்து கொண்டார்.

இந்த நிலையில்தான், வேற்றினத்தவரை திருமணம் செய்த பெண்ணால், தங்கள் சமுதாயத்தினருக்கு எந்தவித பாதிப்பும் ஏற்பட்டுவிடக் கூடாது என்று கோயிலில் பரிகார பூஜையையும் நடத்தியுள்ளனர்.

அதாவது, பெண்ணின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் என சுமார் 40 பேர் சேர்ந்து, பரிகார பூஜை என்ற பெயரில், கோயிலில் மொட்டையடித்துள்ளனர். அதுமட்டுமின்றி கோழிகள், ஆடுகள், பன்றிகளை பலிகொடுத்து, கிராமத்துக்கு விருந்தும் ஏற்பாடு செய்தனர்.

இந்த விவகாரம் குறித்த விடியோ, சமூக ஊடகங்களில் பரவியதையடுத்து, சம்பவம் குறித்து மாவட்ட அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.