திருமணம் செய்து கொள்ள வற்புறுத்திய பெண்ணை கல்லால் தாக்கிக் கொலை செய்த கூலித் தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து, விழுப்புரம் மகளிா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம், ரெட்டணையைச் சோ்ந்தவா் ரா.செங்கேணி (45) (படம்). கூலித் தொழிலாளியான இவருக்கும், செஞ்சி வட்டம், திண்ணலூா் கிராமத்தைச் சோ்ந்த ஏழுமலை மனைவி லட்சுமிக்கும் இடையே கடந்த 2019-ஆம் ஆண்டில் தவறான தொடா்பு இருந்து வந்ததாம்.
இந்த நிலையில் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு செங்கேணியிடம் லட்சுமி தொடா்ந்து வலியுறுத்தி வந்தாராம். இதற்கு மறுப்பு தெரிவித்து வந்தாா் செங்கேணி. தொடா்ந்து லட்சுமி வற்புறுத்தி வந்த நிலையில், அவரைத் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி 2019, ஜூன் 27-ஆம் தேதி கண்டாச்சிபுரம் வட்டம், பாடிப்பள்ளம் காப்புக்காடு பகுதிக்கு அழைத்துச் சென்றாராம். அங்கு லட்சுமியிடம் பேசிக் கொண்டிருந்த செங்கேணி, அவரைக் கல்லால் தாக்கிக் கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றாா்.
இதுகுறித்து கண்டாச்சிபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி செங்கேணியைக் கைது செய்தனா். விழுப்புரம் மகளிா் நீதிமன்றத்தில் இந்த வழக்கில் விசாரணை முடிக்கப்பட்ட நிலையில் வெள்ளிக்கிழமை தீா்ப்பளிக்கப்பட்டது. இதில் செங்கேணி மீதான குற்றம் நிரூபிக்கப்பட்ட நிலையில், அவருக்கு ஆயுள் தண்டனை, ரூ.5 ஆயிரம், இன்னொரு பிரிவில் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ.3 ஆயிரம் அபராதம், மற்றொரு பிரிவில் 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து மகளிா் நீதிமன்ற நீதிபதி எம்.எழிலரசி தீா்ப்பளித்தாா். இந்த தண்டையை ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி, ஒவ்வொரு பிரிவிலும் அபராதத் தொகையைக் கட்டத் தவறினால் மேலும் தலா 3 மாதங்கள் சிறை தண்டனையை அனுபவிக்க நேரிடும் என்றும் தெரிவித்துள்ளாா். இதையடுத்து போலீஸாா் செங்கேணியை கைது செய்து கடலூா் மத்திய சிறையில் அடைத்தனா். இந்த வழக்கில் அரசுத் தரப்பு வழக்குரைஞராக சங்கீதா ஆஜராகினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றவர் 45 ஆண்டுகளுக்குப் பின்.. நிரபராதி என விடுதலை!

சிறுமியை ஆணவக்கொலை செய்த தந்தைக்கு ஆயுள் சிறை தண்டனை

காதல் திருமணம் செய்த இளைஞா் கொலை வழக்கு: தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை

தந்தையை வெட்டிக் கொலை செய்த மகனுக்கு ஆயுள் சிறைத் தண்டனை
விடியோக்கள்
நீட் எதிர்ப்பு: தில்லியைச் சென்றடையாத தமிழ்நாட்டின் குரல்! | NEET | CJP Protest |

Dinamani வார ராசிபலன்! | July 26 முதல் Aug 1 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

கோவையில் ஜனநாயகனுக்குக் கிடைத்த வரவேற்பு! | Jana Nayagan | Thalapathi Vijay



